உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

||.

அப்பாத்துரையம் - 35

அச்சமயம் திடுமென நாடகக் காட்சி நாடகமாயிற்று. கண்மூடியிருந்த சித்தர் கண்ணைத் திறந்தார்; ஒரு கையை ஓங்கினார்; ஒரு கையை ஏதோ ஒரு முத்திரை வடிவில் கூப்பி விரித்தார்; தடதடவென ஏதோ முனகினார். நிலத்தில் கிடந்த எலும்பு திடீரென்று உயிர் பெற்றதுபோலக் கடகடவென்று ஆடிற்று.

கோயிலின் நாலு மதில்களுக்கும் அப்பாலிருந்து, அதே அரவம் ஒலி எதிரொலியாக, அலை எதிரலையாகக் கேட்டது. தூர அரவம், அண்டை அரவமாக வளர்ந்தது. இறுதியில் அது காதடைக்கும் பேரொலியாயிற்று.

செம்பியன் நாற்புறமும் பார்த்தான். காட்டின் நாலா திசையிலிருந்தும் எலும்புகள் கோயிலை நோக்கித் துடிதுடித்து வந்து கொண்டிருந்தன. கதவிடுக்குகள் வழியாகச் சில உள்ளே பாய்ந்தன. சுவர் தாண்டி இடிந்த மேடை வழியாகச் சில தாவிச் சென்றன. சில சுவரில் புழை தேடிச் சுழன்று வந்து புகுந்தன.

எல்லா எலும்புகளும் முதலெலும்பின் அருகிலேயே வந்து கிடந்தன. எலும்புகளின் ஒரு குப்பை மேடாகச் சித்தர் காலடியில் அவை அமைந்தன.

செம்பியன் கண்களும் காதும் இரவின் அமைதியைத் துளைத்து, யாவும் தெளிவாகக் கண்டன. அடுத்து என்ன நடக்கும் என்று காணும் ஆர்வம் அவன் நாடி நரம்புகளையெல்லாம் முழுதும் விழிப்பூட்டின. அவன் மேலும் இமைகொட்டாது பார்த்தான்.

ஆனால், ஒன்றும் நிகழவில்லை. சித்தர் மீண்டும் அறிதுயிலில் ஆழ்ந்தார்.

அவன் யாம எல்லையும் வந்துவிட்டது. தூக்கத்தைக் கெடுத்து மேலும் இருக்க அவன் விரும்பினாலும், துணியவில்லை. திட்டத்தின்படி அவன் படைத்தலைவன் மகன் வளவனை எழுப்பி அமர்த்தி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கிட்டத்தட்டச் செம்பியன் காவலில் நடந்தபடியே, வளவன் காவலிலும் யாவும் நிகழ்ந்தன. யாமத்தின் பெரும்பகுதியும் கழிவது அவனுக்கும் பெருஞ் செயலாயிருந்தது. ஆனால், யாமம்