உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

125

பெற்றேன். ஆனால், என் தாய் தந்தையரும் உற்றார் உறவினர் குடிகளும் எலும்புக் குவியலாய்க் கிடக்க, அதை நான் எப்படி மறந்து வாழ முடியும்!” என்று தேம்பினாள்.

மன்னன் நண்பர்களை அழைத்தான். அவர்களுடனும், அரசியுடனும் மீட்டும் பயணமானான். நான்கு நண்பர்களும் கடல்கடந்து இளவரசியின் நாடாகிய கன்னிப்போத்த நாட்டை அடைந்தனர்.

அவர்கள் தலைநகரை அணுக இன்னும் அஞ்சினார்கள். னென்றால், மறைவிலிருந்தே அவர்கள் அரக்கியர் நடமாட்டத்தைக் கவனித்து விட்டார்கள். “உயிர் மந்திரத்தால் எல்லாரையும் பிழைப்பிக்கத்தான் முடியும். மீண்டும் அரக்கியரிடமிருந்து அவர்கள் தப்ப முடியாதே” என்று அரசன் சிந்தித்தான்.

உயிர் மந்திரத்தை அவர்களுக்கு மறைவிலிருந்து காட்டிய சித்தர் நினைவு அப்போதுதான் அவர்களுக்கு வந்தது.“உயிரைக் கொடுக்கும் ஆற்றலுடையவர்களுக்கு அதை அகற்றும் ஆற்றல் இல்லாமலா போகும்? மேலும் இரவு தோறும் புலியின் உயிரை வாங்கிப் பகல்தோறும் அளிப்பவர் உயிர்கள் மீது தண்ணளி உடையவராகத்தான் இருக்க முடியும். ஆகவே அவரிடமே சென்று யாவும் ஒளியாமல் கூறி உதவி பெறுவோம்" என்று தோழர்கள் அறிவுரைத்தார்கள்.

இளவரசியுடனே யாவரும் காளிகோயிலுக்குச் சென்றனர். பகலில் சித்தர் உணர்வு நிலைக்கு வரும்வரை காத்திருந்தனர். நண்பகல் அவர் விழித்தார்.“வருக அரசரே, அன்பர்களே! என்ன செய்தியாக வந்தீர்கள்?" என்று அவர் இன்முகத்தோடு

வினவினார்.

"வந்தவுடன் எங்களை இனமறிந்த தாங்கள் அறியாத தென்ன இருக்க முடியும். அருந்தகைப் பெரியீர்! ஆயினும் தாங்கள் கேட்டமுறையில் கூறுகிறோம்” என்று தொடங்கி அரசன் தங்கள் கதை முழுதும் கூறினான். இறுதியில் இளவரசியை முன்னிறுத்தி, “இதுதான் இந்நாட்டின் எண்ணற்ற கோடி உயிர்களுக்கும் பெருமைக்கும் ஒரே எச்சமிச்சமாய் உயிருடனிருக்கும் அரசிளஞ்செல்வி; இவள் இப்போது என்