உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(126)

||–

அப்பாத்துரையம் - 35

வாழ்க்கைத் துணைவி; எங்கள் நாட்டரசி; அவள் பெற்றோர் நாட்டை மீட்டும் உயிர் வாழவைக்கவே பல்லாயிரங்கல் தொலைக்கு அப்பாலிருந்து கடல் கடந்து வந்திருக்கிறோம்" என்றான்.

சித்தர் பெருமூச்சு விட்டார். பின் நண்பர்கள் தெளிவாகக் கேட்கும்படி ஒரு மந்திரத்தை முணுமுணுத்தார். ஒரு சிறு எலும்பு முன் வந்தது. பின் நான்கு தடவை உயிர் மந்திரத்தை ஓதினார். ஒரு மான் உயிர்பெற்றெழுந்து அனைவரையும் பார்த்து மிரளமிரள விழித்தது.

"அன்பர்களே, முன் நீங்கள் கேட்ட உயிர் மந்திரம் இது; இதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இனி இதையும் கவனியுங்கள். து சாமந்திரம். உங்கள் காரியம் வெற்றியடைய இது உதவும்" என்றார்.

அதன்பின் அவர் கையில் சிறிது நீர் எடுத்தார். உரக்க ஒரு மந்திரத்தை ஓதி அதன் மீது தெளித்தார். மான் இருந்த இடம் தெரியவில்லை. ஒரு பிடி சாம்பல் முன்னே கிடந்தது. சித்தர் வேறொன்றும் பேசவில்லை. அவர் உடனே அறிதுயிலில் ஆழ்ந்தார்; நண்பர் அவரை வணங்கி வழிபட்டுச் சென்றார்கள்.

அவர்கள் மறுநாள் மாலைவரை காத்திருந்தனர். அரக்கியர் எழுந்து உலவத் தொடங்கினர். அவர்கள் இருந்த இடம் மனிதவாடை தட்டுப்பட்டது. அப்பக்கமாக வந்தனர். தொலைவிலிருந்தே இளவரசியையும் நண்பர்களையும் அவர்கள் கண்டு சீற்றத்துடன் கழுத்தையும் கையையும் நீட்டினர். ஒருத்தி கை, இளவரசியையே தூக்கி எடுக்க முயன்றது.

அரசன் அதற்குள் நீரேந்தினான்; சாமந்திரத்தை உருவிட்டான்; நீரை எறிந்தான். அரக்கியர் மாயமாய் மறைந்தனர்; மூன்று பிடி நீலநிறச் சாம்பல் அவர்கள் முன் கிடந்தது.

செம்பியன் அதன்பின் நகர்புறத்திலுள்ள எலும்புக் குவியலை அணுகினான். ஒவ்வொரு எலும்பையும் எடுத்து வைத்து, முதல் மந்திரம் ஓதினான். அதற்குரிய எலும்புகள் விரைந்து வந்த தனித்தனிக் குவியல்களாயின. வளவன் அவற்றுக்கு உருவம் அளித்தான்.வானவன் அவற்றுக்குத் தசையும் மேனியும் வருவித்தான். இறுதியில் அரசன் எல்லா