உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

127

உடல்களுக்கும் உயிர் கொடுத்தான். உயிர்பெற்ற உடல்கள் குதிரைகளாகக் கனைத்தன. நாய்களாகக் குரைத்தன. ஆடவர் பெண்டிர் குழந்தைகளாக ஆரவாரத்துடன் ஊடாடினர்.

உயிர் பெற்றவர்களுள் கொங்குலாமலரின் தாய் தந்தையர், பாங்கியர், சேடியர், காவலர், பணிப்பெண்கள் யாவரும் இருந்தனர். அவர்கள் கொங்குலாமலரை ஆரத்தழுவி மகிழ்ந்தனர். அவள் மூலம் அவர்கள் கோனாட்டு அரசனையும் நண்பர்களையும் பற்றிய எல்லாச் செய்திகளும் அறிந்து அவர்களைப் பாராட்டினர்.

பல நாள் விருந்தின்பின், கன்னிப்போத்த நாட்டரசன் பெரும் பொருட்குவியலுடன் மகளையும் மருமகனையும் நூறு கப்பல்களுடன் வழியனுப்பி வைத்தான்.

தமிழகமும் கடல்கடந்து கன்னிப்போத்த நாடும் நீண்டநாள் செல்வளத்துடன் நெடுவாழ்வு வாழ்ந்தன.

“குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு"

(குறள்.544)