உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. தீர்வைநாயகன்

நான், அப்போது அச்சம் என்பது இன்னது என்றறியாத ளங்காளை. எனக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணமாகி இருந்தது.

தீர்வை நிலையத்தில்

நான்

பணியேற்றுச்

சில

காலமாய்விட்டது. தாழ்ந்த பணியில் புகுந்து, என் ஆர்வத்தாலும் சுறுசுறுப்பாலும் நேர்மையாலும் நான் சடசடவென்று உயர்ந்த படிமைகளுக்கு ஏறினேன். என் வயதுக்கு இந்தப் படிமையும் ஊதியமும் பெரிதாகவே எல்லாருக்கும் தென்பட்டது.என்னிலும் எத்தனையோ மடங்கு உயர்குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை மணந்ததனால், என் மதிப்பு இன்னும் உயர்ந்தது. என் ஆர்வமும் பன்மடங்காயிற்று.

பல செல்வ இளைஞர்களைவிட்டு விட்டு என்னைக் காதலித்த அந்தப் பெண்ணினல்லாள் தேர்வுக்கு நான் தகுந்தவனே என்றுகாட்ட, நான், இன்னும் உயர்படிமையும் புகழும் நாடினேன்.

நான் வேலை பார்த்த பணிமனை, இங்கிலாந்தின் தென் கரை யோரத்தில் டோவர் அருகே இருந்தது. அந்தப் பகுதியிலுள்ள வணிகரில் பெரும்பாலோர், அந்நாளில் கள்ள இறக்குமதி வாணிகத்தில் ஒரு கை உடையவர்களாகவே இருந்தனர். உள் நாட்டிலும் பல கல் தொலைவுவரை உள்ள மக்கள் அந்த வாணிகத்தால் தம் சிறு ஆதாயத்துக்கு ஒரு அணை தேடுபவர்களாகவே இருந்தனர். கள்ளச்சரக்குகள் அந்நாளைய வீடுகள் பலவற்றில் மறைவிடங்களில் சேமித்துவைக்கப்பட்டிருந்தன. வீடுகள் கட்டும்போதே அந்தவகைக்கென்று நிலவறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

கள்ள வாணிகத்தை அடக்கும்வகையில் அரசியலார் எடுத்த நடவடிக்கைகளெல்லாம் பெரும்பாலும் எப்படியோ