உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

129

வெற்றுவேட்டு நடவடிக்கைகளாய் அமைந்தன. ஏனெனில் தீர்வைத்துறைப் பணியாளர்களுக்குள்ளேயே பலர் அவ்வாணிகத்தின் ஆதாயத்தில் பங்குகொண்டிருந்தனர். எனவே, அவர்கள் நடவடிக்கைகள் யாவும் இருதலை மணியங்களா யிருந்தது இயல்பே. அத்துடன் ஆதாயத்தில் பங்கு கொள்ளாத வர்கள்கூட அத்துறையில் அவ்வளவு முனைந்து உழைக்க விரும்பவில்லை. ஏனெனில் அத்தகைய உழைப்பின் மூலம் அவர்கள் பலரது வெறுப்பையும் பகைமையையும் பெறவேண்டி யிருந்தது. ஒரு சிலர் என்னைப்போல ஆர்வம் காட்டினாலும், பொதுவாக இந்த நிலைமை வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

அவ்வப்போது தீர்வைத்துறையாளர் நடவடிக்கைகள் பற்றிப் பரபரப்பான செய்திகள் வரும். எங்காவது ஒரு கள்ள வாணிகக் கப்பல் பிடிபடும்; அல்லது கள்ள வாணிகச் சரக்குக் கண்டு கைப்பற்றப்படும். ஆனால், இவற்றால் கள்ள வாணிகத்துக்கு மிகுதிதடை ஏற்படுவதில்லை. அதன் ஆதாயத்தில் இத்தகைய நடவடிக்கைகளால் வரும் குறைபாடு நூற்றுக்கு ஒன்று விழுக்காடுகூட இருக்காது. அந்நடவடிக்கைகள் தீர்வை நிலையத்துக்கு ஒரு தன் மதிப்பை உண்டுபண்ணவும், பங்கு கொள்பவர் அதைச் சற்று உரிமையுடன் கேட்டுப் பெறவும் மட்டுமே உதவின.

தீர்வை நிலையத்தின் இந்த மரபுகளுக்கு நான் ஒரு விதிவிலக்கு என்பது வரவரத்தான் கள்ள வாணிக மக்களுக்குத் தெரிந்தது. ஆனால், அவர்கள் அதை அறியுமுன் நிலைய மேலிடம் உணர்ந்து எனக்குப் படிமையேற்றமும் புகழும் பாராட்டும் தந்தது. இன்னும் இவை வளரும் என்ற நம்பிக்கையும் தரப்பட்டது.எனக்குக் கிடைத்த ஒரு பெருவெற்றி இவ் வகையில் என் புகழையும் கள்ள வாணிகக்காரருக்கு என்மீதிருந்த அச்சத்தையும் பெருக்கிற்று.

ஒருநாள் ஒரு கேணியிலிருந்து ஒரு

மனிதன்

வெளிவருவதைக் கண்டேன். உடனே கேணியுள் இறங்கினேன். நீர்மட்டத்தருகே குகைவழி ஒன்று இருந்தது கண்டேன்; அது கள்ள வாணிகக்காரரின் திருட்டுச் சந்திப்பிடம். அவர்கள் சரக்குச் சேமிப்பிடமும் அதுதான். அதில் பலர் கையும் களவுமாக அகப்பட்டு விழித்தனர்; பலர் என்னிடம் மன்றாடியும் நான்