உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(130)

||–

அப்பாத்துரையம் - 35

அத்தனை பேரையும் தூக்குக்கு அனுப்பினேன். என் புகழ் பின்னும் வளர்ந்தது. என் தெம்பும் மிகுந்தது. ஆயினும் இச் செய்கையால்

என்னையறியாமல்

நான்

வாணிகக்காரரின் மாளாப் பகைமைக்கு ஆளானேன்.

கள்ள

இப்போது, கள்ள வாணிகக்காரர் விழித்தனர். என்னை அச்சுறுத்தி மொட்டைக் கடிதங்கள் வரத் தொடங்கின. எச்சரித்த நண்பர்களும் பலர்; ஆனால், என் காதலியின் கண்ணில் என் தகுதியை உயர்த்த நான் விரும்பியதனால், இவற்றைச் சிறிதும் சட்டைசெய்யவில்லை. ஆயினும், என் கண்டிப்பும், இரவுபகல் அயரா உழைப்பும் அவளுக்குக்கூடக் கவலை தந்தன. அடிக்கடி என்னுடன் அவள் எவ்வளவோ நயமாக இவ்வகையில் வாதாடினாள்.

66

‘கடமை, பணி, படிமை உயர்வு என்றெல்லாம் ஓயாது கூறுகிறீர்கள். இவற்றுக்கெல்லாமா நான் உங்களை மணந்து கொண்டேன். நமக்கு இப்போது இருப்பதைவிட இன்னும் குறைந்த செல்வம் இருந்தால்கூட, நான் வருந்தமாட்டேன்.நான் விரும்புவது உங்களைத்தான்; உங்களுக்கு அமைதியாக வாழ்வதற்காக நான் வறுமை, கடுஉழைப்பு. எளிய வாழ்வு ஆகிய எதையும் பொருட்படுத்த மாட்டேன். ஆகவே என்மீது இரக்கப் பட்டாவது, இந்த வேலையை உதறித்தள்ளி விடுங்கள். அல்லது மற்றப் பேரைப் போலச் சம்பளத்துக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்வதுடன் அமையுங்கள்,” என்று அவள் ஓயாமல் என்னுடன் வாதாடினாள்; கெஞ்சினாள். என்னை வேலையார்வத்திலிருந்து தன் காதலில் ஈடுபடுத்திச் சிக்கவைக்க அவள் ஆயிரம் இனிய சூழ்ச்சி முறைகளைக் கையாண்டாள்.

அவள் அச்சத்தின் காரணத்தை நான் அன் அன்று உணரவில்லை. அவள் நல்லெண்ணத்தை தூய உள்ளத்தை, தன்மறுப்பு மனப்பான்மையைத்தான் நான் அறிந்தேன். அறிந்த அளவில் அது என்னை என் வழியிலேயே மேலும் ஊக்கிற்று. ஏனென்றால், என் இன்ப வாழ்வுக்காக அவள் எடுத்துக்கொண்ட கவலை, அவள் கடமையுணர்ச்சியை எப்படிக் காட்டிற்றோ, அதே போல, அவள் இன்பத்துக்கான கவலையை மேற்கொண்டு உழைப்பதுதான் என் கடமை என்று நினைத்தேன். ஆகவே, அவள் சொல்லுக்கு நான் மறுப்பு எதுவும் சொல்லவில்லை.