உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

131

நயமாகத் தட்டிக்கழித்து என்போக்கில் மேன்மேலும் முனைந்து வந்தேன்.

கள்ள வாணிகக்காரர் விரும்பும் நாட்கள் மழை நாட்களேயாகும். அப்போது எங்கும் சேறாயிருப்பதனால், பொதுவாகப் போக்குவரவுக்கு இடைஞ்சலானாலும், அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் இருந்தது. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதினைந்தாம் நாள்- அந்த நாளை நான் என் வாழ்நாள் முழுவதும் என்றுமே மறக்கமுடியாது- அந்தநாள் அத்தகைய நாளாயிருந்தது- அன்று என் பெயருக்கு ஒரு கடிதம் வந்திருப்பாதாக என் பணியாள் கூறி ஒரு உரையைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வழக்கமாக

என்னை

அச்சுறுத்தும் கடிதங்களில் ஒன்றாகவே அது இருக்கக்கூடும் என்று நினைத்தேன். ஆனால், வெளி உறையைப் பிரித்தவுடனே, இது, அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்று கண்டேன். அது என் மேற்பணியாளர் ஒருவரின் கையொப்பத்துடன் அவர் பெயரால்- எழுதப் பட்டிருந்தது.அஞ்சல் பொறிப்போ அதே தேதியில் ஃவோக்ஸ்டன் என்ற இடத்திற்குரியதாயிருந்தது. அவர் இருப்பிடம் அதுவே யாதலால், அவசரமாக எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை ஆவலுடன் வாசித்தேன். அதில் இரண்டு சிறு வாசகங்களில் என் திறமைக்கு நற்சான்றும் பாராட்டும அளிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாசகத்தில் இப் புகழ்ந்துரைக்குரிய உடனடிக் காரணம் தெரிந்தது.

ம்

"இன்றிரவே கள்ள வாணிகச்சரக்கின் பெருந்தொகுதி ஒன்று, ஃவோக்ஸ்டனுக்கும் டோவருக்கும் இடையில் இறக்கப்பட இருக்கிறது. ஆகவே, இரவு பதினோரு மணிக்குள் கடலை யடுத்துள்ள குன்றின் பக்கம் என்னை வந்து சந்திக்கக் கோருகிறேன், என்று அம் மேற்பணியாளர் கட்டளை யிட்டிருந்தார். அத்துடன் இச் செய்தியைத் தீர்வைத்துறையில் கூடயாருக்கும் தெரிவிக்க வேண்டாமென்றும், யாரையும் உடன் கொண்டு வராமல் தனியாகவே வரும்படியும் எழுதியிருந்தது.

கடிதம் வந்ததுமுதல் என் கால்கள் நிலத்தின்மீது பதிய வில்லை. நான் நீண்டநாள் காத்துக்கொண்டிருந்த முதல்தர வாய்ப்பு இன்று கிடைத்திருக்கிறது. இன்று நான் காட்டும்