உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

தும்பைப்பிடித்து

133

உண்மை என்றால் பிறரிடம் சொல்லும் அரைகுறை உண்மை யல்ல. பாசமுள்ளவர்கள், அதிலும் பெண்கள் உண்மையின் ஒரு மறு தும்புவரை நயமாக இழுத்து வெளிப்படுத்தாமலா இருப்பார்கள்? அவள் கேள்விமேல் கேள்விகேட்டுப் பசப்பி, இறுதியில் கடிதத்தையே வாங்கிப் பார்த்துவிட்டாள்!

தீர்வைத்துறை மேற்பணியாளர்களிடம் மட்டுமல்ல, காவல்துறை மறை வேவுக்காரரிடமும் வழக்கு மன்றத்துமன்று உரைஞரிடமும் நான் குறுக்குக் கேள்விகளுக்கு ஆளானதுண்டு. ஆனால், என் மனைவியின் குறுக்குக் கேள்விகள்போல அவை என்னை அவ்வளவு திக்கு முக்காட வைத்ததில்லை.

"மழையும் புயலும் வாரியடிக்கிறது. வானம் கண்ணையும் முகத்தையும் மூடிக்கொண்டு அலறுகிறது இப்படிப்பட்ட நேரத்தில் யார் வெளியே போவார்கள்? மேற்பணியாளர் நீங்கள் வருவதை எதிர்பார்ப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. அவர்கூட உண்மையில் வெளியேறமாட்டார். ஆகவே, நீங்கள் இன்று போக வேண்டாம்" என்றாள்.

66

“அவர் வருவதாகக் கூறியிருக்கிறார். என்னையும் வரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நான் போய்த்தானாக வேண்டும்.”

66

ஒரு தடவை மழையைச் சாக்கிட்டுக் கட்டளையை மீறினால் என்ன? தலையையா கொண்டுபோய் விடுவார்கள்? அல்லது வேலையிலிருந்து நீக்கிவிடுவார்களா? அப்படி ஒன்றும் செய்யப் போவதில்லை. உங்களைப் போல இன்னொரு துணிச்சல் பேர்வழி எங்கே கிடைக்கப் போகிறார்கள்?”

"நான் அடையவிருக்கும் உயர்பதவியையும் புகழையும் நீ மறுக்கிறாய். குறைந்த அளவு நீ உன் தந்தை வீட்டில் இருந்த நிலையிலாவது நான் உன்னை வைத்திருக்க வேண்டாமா?"

66

'இது ஒரு பெரிய காரியமானால், நான் தந்தை வீட்டிலேயே இருந்திருக்கலாம்! நம்மிடம் இப்போதிருக்கும் பணம் போய்விட்டால்கூட,நான் கவலைப்படமாட்டேன். நீங்கள் இப்படிச் சுற்றித்திரிவதில் நான் படும் துன்பம் அதைவிட மிகுதி”

66

இன்று ஒரு நாள் பொறுத்துக்கொள். இனிப் போகவேண்டி வராது.”