உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

||.

அப்பாத்துரையம் - 35

இன்று ஒருநாள் எனக்காகப் போகாமலிருங்கள், இனி ஒருநாளும் நான் இப்படித் தடுக்கமாட்டேன். இன்று நான் உங்களுக்கென்று சுடச் சுட

66


+

95

என்ன ஆலிஸ், வரவரக் குழந்தையாய் விட்டாய்! என்னையும் குழந்தையென்று நினைத்து விட்டாயா என்ன?'

அவள் சற்றுநேரம் பேசாதிருந்தாள். ஒரு மட்டில் தப்பினோம் என்று நினைத்தேன். ஆனால், கண்களிலிருந்து வடிந்த நீரை அவள், நானும் அறியாமல் மறைக்க முயன்றபோது, என்மனம் துடித்தது.

ஆனால், நான் பேசவில்லை. அவளும் தலைகவிழ்ந்து கடவுள் வழிபாட்டில் ஆழ்ந்திருப்பவர்கள் தம்மை மறந்திருப்பது போல் இருந்தாள்.

ஆயினும் அவள் உள்ளம் சும்மா இருக்கவில்லை. திடுமென அவள் பாயவிட்ட கேள்வி இதற்குச் சான்றுரைத்தது.

"இக்கடிதத்தை உங்கள் மேல்பணியாளர்தான் எழுதி யிருக்கிறா ரென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"

நான் நிமிர்ந்து பார்த்தேன். வழக்குரைஞரல்ல; இந்தக் கேள்வி கேட்டது. ஒரு பெண்தான்!

"அவர் கையொப்பம், அஞ்சலறிவிப்பு எல்லாம் இருக்கிறதே!"

தெரியுமா?

“உங்களுக்கு அவர் கையொப்பம் கையெழுத்துத்தான் தெரியுமா? நீங்கள் அவரைப் பார்த்ததே கிடையாது; அவர் புதிதாக வந்தவராயிற்றே!”

நான் சிறிது நேரம் விழித்தேன். “அவரல்லாமல் வேறு யார் எழுதியிருக்க முடியும்?"

“உங்கள் பகைவர் யாராவது இப்படி எழுதி...

குறுக்குக் கேள்வி கேட்கும் வழக்குரைஞர் படியிலிருந்து துப்பறியும் புனைகதை எழுதும் புனைகதையாசிரியை ஆய்விட்டாள் ஆலிஸ் என்று நினைத்தேன். நினைப்புச் சிரிப்பாக வெளிவந்தது.

அவள் என்னுடன் சிரிக்கவில்லை.