உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

135

'அத்துடன் யாரையும் கூட்டிக்கொண்டு வரக்கூடாது, தீர்வைத் துறையிலுள்ள எவரிடமும்கூடச் செய்தி சொல்லப் படாது,' என்ற வாசகம் தீர்வைத்துறையில் உயர்பணிக்கு வந்துள்ள, ஒருவர், அறிவு நிலைக்கும் முன் எச்சரிக்கைப் பண்புக்கும் முரணாயிருக்கிறது, எனக்கென்னவே...!"

அவள் வழக்கமாக முடிக்கும் பல்லவி எனக்குத் தெரியும். சட்டென நான் எழுந்து, “இதையெல்லாம் பெண்களிடம் கூறியதால் வந்த தப்பு. பேசாமல் உன் காரியம் பார்த்துக் கொண்டிரு, போ. நான் வருகிறேன்”, என்றேன். புறப்படும் நேரம் ஆகாவிட்டாலும், நான் புறப்பட்டேன். திரும்பிப் பார்க்கக்கூடத் துணிவின்றி விரைந்து சென்றேன்.

பல அடி முன் சென்றபின் திரும்பி நின்று பார்த்தேன்.

பெண்ணினத்தின் பரிவு முழுதும் அவள் கண்ணில் குடிகொண்டிருந்தது. அவள் சலவைக்கல்லால் செய்த சிலைபோல அசைவற்று நின்றிருந்தாள்.

அவள் நின்ற காட்சி என் உள்ளத்திலிருந்து என்றும் அகலவே யில்லை. அன்று அவள் சொற்கள்- அவள் கலக்கம்- அவள் இறுதியில் நின்ற காட்சி- அத்தனையும் என் மனக்கண்முன் நின்று அங்குலம் அங்குலமாக வருத்தின. என் வீர உள்ளத்தின் அறிவுத் தெளிவைவிட, அவள் அன்புள்ளத்தில் அறிவுத்தெளிவு மிகுதி அகன்றிருந்தது என்பதை நான் ஒரு தடவை சாகாதவண்ணம் செத்துத்தான் அறியவேண்டி வந்தது. நான் மட்டும் அன்று அவள் சொல்லுக்குச் செவி சாய்த்திருந்தால்...."

தெருக்கள் எங்கும் சாக்கடையில் குமிழியிட்டு ஓடும் நீரோட்டத்தின் அரவம் தவிர வேறு ஓசையில்லை. என்கால்கள் சேற்றில் பதிந்தபின் வெளியேறும்போது ஏற்பட்ட அரவம் அதற்குத் தாளமிட்டது.தெருவிளக்குகளில் ஒன்றிரண்டு மங்கலாய் எரிந்தன. மற்றவை குளிரினால் அவிந்து போயிருந்தன. நகர் கடந்தபின் வெள்ளைச் சுண்ண மண்ணாலான நிலமுழுவதிலும் நீர் தோய்ந்து எங்கும் சறுக்கிற்று. சமநிரப்புக் கடந்து குன்றின் சரிவில் ஏறும்போது இன்னும் கடுமுயற்சி தேவைப்பட்டது. மேடு பள்ளங்கள் மிகுதியாயிருந்தன. இறுதிக் கட்டத்தில் சாய்வான புல்பரப்பில் கால்களாலும் கைகளாலும் தவழ்ந்தே செல்ல