உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(136) || ||–

அப்பாத்துரையம் - 35

வேண்டியதாயிற்று. கடைசியாகச் சந்திப்பிற்குக் குறிக்கப்பட்ட இடமாகிய பாறையின் உச்சியை அடைந்தேன்.

இந்த இடத்தை நான் நன்கு அறிவேன். கடலின் திசையிலுள்ள அதன் பக்கம் செங்குத்தாகக் கடலலைகள் மீது நின்றது. அதன்மேல் அடிக்கடி கடலோட்டிகளுக்கு உதவியாகத் தீப்பந்தங்கள் வளர்க்கப்படும். அவை கடலில் பல கல் தொலை ஒளி வீசிக் கரையோர அறிகுறியாக நிலவும். அதை ஒரு கவிஞன் பாடியிருந்த காரணத்தால், அதற்குக் கவிஞன் பாறை என்று பெயர் வழங்கியிருந்தது. கள்ள வாணிகக்காரருக்கு அது ஒரு முக்கியமான சரக்கிரக்கும் இடமாகவும், சந்திப்பிடமாகவும் இருந்தது.

நான் சிறிதுநேரம் முன்னும் பின்னுமாக அந்தப் பாறைமீது நடந்தேன். கடற்பக்கம் சென்று பாறை விளிம்பிலிருந்து கடலை எட்டிப்பார்த்தேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லையானாலும் அலைகளின் ஓசை அருகே கேட்டது. மிகு தொலைவில் எங்கோ உள்ள ஒரு கரையோரப் பந்தம் சிறு செம்புள்ளியாய் ஒருகணம் தெரிந்தது. ஆனால் மறுகணம் அது ஒரு முகில் திரளுக்குள் மறைந்தது. வேறு ஒளிகளோ மனித நடமாட்ட அடையாளமோ எதுவுமில்லை. என்னையறியாமல் என் உள் எலும்புகளினூடாக ஒரு நடுக்கம் ஏற்பட்டது.வழக்கமான என் நெஞ்சுரம், இன்று ஏன் என்னிடம் செயலாற்றவில்லை என்று என்னை நானே கண்டித்துத் திடப்படுத்திக்கொண்டேன்.

இரண்டொரு விநாடிகள் இவ்வாறு கழிந்தன. குன்றின் சரிவில் எதோ கருந்திரள்கள் தெரிந்தன. சிறிது நேரத்தில் அவை சரிவுகடந்து நான் இருந்த மேட்டு விளிம்பு தாண்டி வானவெளியின் பின்னணியை ஊடுருவி எழுந்தன.

அவை புதர்களா, மனிதர்களா என்று பின்னும் சற்றுத் தயங்கினேன். அத்திசையிலிருந்து எழுந்து அடங்கிய முணுமுணுப்புக்குரல், அவர்கள் மனிதர்களே என்பதைப் புலப்படுத்திற்று. இது என் மேற்பணியாளரும் அவர் ஆட்களுமாகவே இருக்கவேண்டும் என்று நினைத்தேன். உருவங்கள் சற்று அருகே வந்ததும், 'வணக்கம், அன்பர்களே' என்று வரவேற்க முனைந்தேன். எதிர்வணக்கம் எதுவுமில்லை.