உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

137

உருவங்கள் பேச்சு மூச்சில்லாமலே மெல்ல என்னை

நோக்கி நகர்ந்தன.

அவர்கள் கள்ள

வாணிகக்காரராயிருப்பார்களா?

மேற்பணியாளர் வரவறிந்து அவர்கள் வந்திருக்கிறார்களா? அல்லது தற்செயலாக வந்திருக்கிறார்களா?

இன்னொரு அச்சந்தரும் எண்ணமும் மின்னலென என் உள்ளத்தில் பாய்ந்தது. என்னை அழைத்தது இவர்களே ஆயிருக்கக்கூடுமா? கடிதம் என் இளமனைவி அஞ்சியபடி என்னை அகப்படுத்தவைக்க ஏற்பாடு செய்த பொறியாகக்கூட இருக்குமா?

எனக்கு உண்மையிலேயே நடுக்கம் ஏற்பட்டது. வேறு எந்த டமானாலும் வேளையானாலும் நான் அஞ்சி இருக்க மாட்டேன். அந்த இடத்திலும் வேளையிலும் தனியாக எதுவும் செய்யமுடியாது. மேலும் என்னைச் சூழ்ந்து கொள்வகதற்காக அவர்கள் பிரிந்து பரந்தபோது அவர்கள் ருபதுக்கு மேற்பட்டவர்கள் என்பதும் கண்டேன்.

அவர்கள் எனக்குச் சிந்திக்கவே நேரம் கொடுக்கவில்லை. இம்மெனுமுன் நான் நிலத்தின்மீது வீழ்த்தப்பட்டேன். பத்துப்பன்னிரண்டு பேர்கள் என் துப்பாக்கி கத்தி ஆகியவற்றை அகற்றி என்னை வரிந்துகட்டினர்.

'அடே! ஆள் ஒருவகையில் கடைசியாக அகப்பட்டான்!’ என்றது ஒருகுரல்.

'வெட்டு' 'கொல்லு' 'மண்டைய உடைத்து அவன் மூளையை மீன்களுக்கு இரையாக்குவோம்'! 'கடலில் தூக்கி எறியுங்கள்'! என்று பல கருத்துரைகள் வீசப்பட்டன.

'போதும்,நிறுத்துங்கள்' என்றது ஒருகுரல். அது தலைவன் குரலாயிருக்கவேண்டும்! ஏனென்றால் உடன் தானே எல்லாரும் வாயடைத்துக் கையடக்கி நின்றனர்.

'இரண்டு மூன்று பேர் சேர்ந்து இவனைத் தூக்கி நிறுத்துங்கள்.நான் ஒளிப்பந்தத்தை அவன் முகத்தின் முன்காட்டி ஆள் அவன்தானா என்பதை ஐயத்துக்கிடமில்லாமல் முதலில் உறுதி செய்துகொள்ள வேண்டும்,' என்றான் அவன்.