உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

||-

அப்பாத்துரையம் - 35

நான் எவ்வளவு திமிறியும் அவர்கள் கட்டுடன் என்னைத் தூக்கிப் பிடித்தனர். பந்தம் என் முகத்தினருகே காட்டப்பட்டது. ஒளியும் வெப்பமும் தாங்க முடியாமல் நான் கண்களை மூடினேன்.

'ஆள் இவன்தானடா' என்று கூவின பல குரல்கள்.

நான் சற்றே கண்களைத் திறந்து பார்த்தேன். காலன் தூதுவர்போல அச்சந்தரும் பல உருவங்கள் என்னைச் சூழ்ந்து நின்றன. அவர்கள் அனைவர் இடையிலும் கொடுங்கத்திகளின் பித்தளைப்பிடிகள் பளபளத்தன. ஒன்றிரண்டு பேரிடம் கைத்துப்பாக்கிகளும், தலைவனிடம் துப்பாக்கியும் இருந்தன. ஆனால், ஒருவரைக்கூட என்னால் அடையாளம் காண முடிய வில்லை. அவர்கள் அனைவரும் முகத்தைக் கருந்துணியாலான முகமூடியால் மறைத்திருந்தனர்.

'ஆம். ஆள் இவன்தான். ஆல்ஃவிரட் ஹார்வி. நம்மை எல்லாம் பலநாள் அச்சுறுத்திவந்த புலி!' என்றான் தலைவன்.

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

“இவன் மக்கள் பகைவன். கொஞ்சமும் மூளையில்லாமல் நம்மை எதிர்த்தழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான். இப்பொழுது தன் உயிருக்குத் தானே தேடிக்கொண்டான்." என்றான் தலைவன்.

66

உலை

"ஆம்; ஆம்; இவனை விடப்படாது. வெட்டு, கொல்லு! வதை! நீரில் ஆழ்த்து! கொன்று உடலைத் துண்டு துண்டாக்கி மீனுக்கு இரையாகப் போடு," என்று வெஞ்சீற்றக் குரல்கள் மீட்டும் எழுந்தன.

பேச்சுமட்டுமல்ல, அவர்கள் ஆத்திரத்தை எனக்குக் காட்டியது! என்னைப் பிடித்திருந்தவர்கள் பூனை தன் கையிலகப்பட்ட எலியைக் குலுக்கி ஆட்டுவதுபோல ஆட்டினர். உடலின் பல பாகங்களிலும் குத்துகள், உதைகள், அடிகள் விழுந்தன.

என் இளமனைவியின் அன்பு எச்சரிக்கையை அசட்டை செய்த என் முட்டாள்தனத்தை ஒவ்வொரு அடியும் குத்தும் உதையும் எடுத்துரைப்பவை போல இருந்தன.