உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

(139

'ஏன் இன்னும் தாமதம்? அவனைச் சுட்டுத் தள்ளுங்கள்,' என்றான் தலைவன்.

சுடவேண்டாம். குத்திச் சந்து சந்தாக வெட்டுங்கள்,'

என்றது ஒரு குரல்.

'அடித்துச் சாகடியுங்கள்,' என்றது மற்றோர் குரல்.

பல கருத்துரைகளுக்கிடையில் என் உயிர் ஊ ளசலாடிக் கொண்டிருந்தது.

தலைவன் குரல் எல்லாக் குரலையும் அடக்கி எழுந்தது: "நீங்கள் கூறுவதெல்லாம் எளிதான சாவுகள். இவனுக்கு அவை தகாது. தூக்கிட்டுக் கொல்வதுதான் சரி.'

‘ஆம். அதுதான் சரி' என்றன பல குரல்கள்.

கடலின்மீதே பாறையின் உச்சியில் தூக்குவோம்.'

மீண்டும் தலைவன் குரல்: ‘படபடப்பு எதுவும் தேவையில்லை, தோழரே. தண்டிக்கத்தான் போகிறோம். அவன் தன்பக்கம் என்ன சொல்கிறான் என்று பார்த்துப் பின் தண்டிப்போம்.'

6

என் வாயடைப்புமட்டும் விலக்கப்பட்டது. மீட்டும் ஒளிப் பந்தம் என் முன்- இத்தடவை சற்றுத் தள்ளிகாட்டப்பட்டது.

'ஆல்ஃவிரட் ஹார்வி, உன் பக்கமாக உன் குற்றங்களுக்கு ஏதாவது விளக்கம் கூறுவதாயிருந்தால் கூறலாம்," என்றான் தலைவன்.

அவன் பேச்சில் நயநாகரிகமே அவனிடம் எனக்கு மற்றவர்களைவிட மிகுதி அச்சத்தை உண்டுபண்ணிற்று.

நான் என்ன சொன்னால் என்ன? சாவது உறுதி. ஆகவே, நான் என் ஆண்மையை முற்றிலும் வரவழைத்துக் கொண்டேன், ஆனால், மனத் துயருடன், வெப்பத்துடன் பேசினேன்:

“நான் என் கடமையைச் செய்தேன். நான் யார் மீதும் பகைமை காட்டவில்லை. என் இடத்தில் எந்த நாணயமான பணியாளனும் என்னைப் போலத்தான் நடந்து கொள்வான். இப்போது நேர்மையற்றவர்கள் என்றீர்கள். நேர்மையாளர் கைப்பட்டால் உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை