உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(140

||-

அப்பாத்துரையம் - 35

நேர்மையற்றவர் கைப்பட்ட எனக்கும் கிடைத்தது. நேர்மைக்கான இந்தத் தண்டனையை நான் பெருமையுடன ஏற்கிறேன்.”

66

"அடே, நம்மிடம் அவர்கள் கொடுங்கோன்மைச் சட்டம் பேசுகிறான். சட்டம்! ஒழிடா இவனை, விரைவில் ஒழி!” என்றன பல குரல்கள்.

என் நெஞ்சம் பின்னும் திடுக்கிட்டது.

66

நீ

'ஆல்ஃவிரட்ஹார்வி, நீ மற்றவர்களைவிடக் கடமை யறிந்தவன். மற்றப் பணியாளர்களுக்குத் தரப்படும் பொது முறைத்தண்டனை உனக்குப் போதாது. உனக்குத் தனித் தண்டனை தருவேன். நீ அந்தக் கிணற்றுப் புகலிடத்தில் எங்களைச் சூறையாடவில்லையென்றால், உனக்குப் பிறருக்குரிய தண்டனையே தந்திருப்பேன். இப்போது உன்கையில் கழுத்தைச் சேர்த்துக்கட்டி மீனுக்கு இரையாக எறியவேண்டும் என்று தண்டனையை மாற்றுகிறேன்,” என்றான் தலைவன்.

66

‘கடல் வேலி இறங்கும் நேரமாயிருக்கிறதே!” என்றான் ஒருவன்.

"அதுவும் நல்லதாயிற்று. நீரில் மெத்தென விழுவதற்கு மாறாக, பாறையில் கணீரென விழட்டும், முதலில்! பின் அலைகளுடன் மீன் வந்து நல்ல விருந்து கொள்ளட்டும்,” என்று கூறினான் தலைவன்.

அனைவரும் அதனைக் கைகொட்டி வரவேற்றனர்.

என் உடலில் எல்லாப் பகுதியும் கட்டப்பட்டது. வாய் அடைப்பு மட்டும் எடுக்கப்பட்டது. இருவர் என்னை இருபுறம் நீரிறைக்கும் கூடையைப்போல் பிடித்துத் தூக்கி ஊசலாட்டினர். "நான் ஒன்று, இரண்டு எனக் கூறி மூன்று என்றவுடன் எறியுங்கள்,” என்று தலைவன் திட்டம் வகுத்துரைத்தான். “ஒன்று!”

அவர்கள் என்னை முன்னும் பின்னுமாக ஊசலாட்டத் தொடங்கினார்கள். சாவின் பிடியில் நான் திணறினேன்.

“இரண்டு!”