உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

141

ஊசலாட்டம் வேகமாயிற்று. அடுத்த கணம் என் உயிர் பிரிந்துவிடும் என்ற நிலையில் என் உள்ளம் வேகமாகச் சிந்தித்தது. அந்த ஒரு கணத்துக்குள் என் இளமனைவியின் முகம்- என்னை எதிர்பார்த்து அவள் அடைய இருக்கும் இன்னல்- எங்கே எப்போது என்னவகையில் இறந்தேன் என்றுகூட அறியாமல் அவள் படக்கூடும் வேதனை- இவ்வளவும் மின்னலினும் வேகமாக ஓடின.நான் வாய்விட்டு அலறினேன்!

ஆ. லூஸி! உன்னையும் நம் குழந்தையையும் இனிக்கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!" என்று என் இறுதி மூச்சாகக் கூறினேன்.

"மூன்று" என இன்னும் கூவப்படவில்லை. ஆனால், அதற்குத் தலைவன் வாயெடுத்தாய் விட்டது. அதற்குள் என் இறுதி வாசகம் அங்கிருந்த அனைவர் உள்ளத்திலும் மின்சாரம் போல் பாய்ந்தது. அனை வரும் ‘ஆ! என்று ஒருமிக்கக் கூவினர். ஊசலாட்டியவர்கள் கைகூடச் சட்டென

என்னை

நின்றுவிட்டது.

இச்சமயம் “மூன்று” என்றான் தலைவன்.

என் உடல் வீசியெறியப்படவில்லை. நான் வியப்படைந் தேன். ஆனால், இன்னது செய்தி என்றறியாமல் மலைப்புற்றேன்.

கூட்டமுழுதும் ஒரே முணுமுணுப்பு, ஒரே பரபரப்பு. ஆனால், தலைவன் வாய் திறக்கவில்லை.

66

எனக்கு இந்தப் பழி வேண்டாம்," என்றான். என்னைத் தூக்கி வீசக் காத்திருந்த இருவரில் ஒருவன்.

66

“அந்த லூஸியை ஜிம் பார்த்திருக்கிறானாம், அண்ணே! பெரிய வீட்டுப் பெண்தான். ஆனால், எல்லாரிடமும் பாசமுள்ள வளாம். அவளை நினைக்க வேண்டாமா?” என்றது ஒரு குரல்.

"ஆம் அண்ணே. நான் குழந்தையைக்கூட ஒரு நாள் எடுத்துக் கையில் வைத்திருக்கிறேன். அதன் சிரித்த முகம் என்கண்முன் நிற்கும்போது, அதன் அப்பனை எப்படி நான்...?" தலைவன் சீறினான்: