உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

||-

அப்பாத்துரையம் - 35

“உங்கள் நெஞ்சு இத்தனை கோழைத்தனம் வாய்ந்தது

""

என்று நான் எண்ண வருந்துகிறேன்.”

66

என்னவோ,

எங்களுக்கும்

பிள்ளை குட்டிகள்,

பெண்டாட்டிகள் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் நாம் எல்லாம் கொலைகூடப் பண்ணுகிறோம். அதை நினைப்பது கோழைத்தனமானால், நாங்கள் கோழைகளாகவே இருக்க விரும்புகிறோம்,” என்றனர் சிலர்.

"சரி, எல்லாரும் இவனை விட்டுவிட்டு அப்பால் வாருங்கள், என்றான் தலைவன்.

""

தலைவன் பிறர் மனத்தை மாற்ற எண்ணுகிறான் என்பது எனக்குத் தெரியாமலில்லை. ஒரு சாவிலிருந்து தப்பினோம். மறுசாவு என்ன வடிவில் வருமோ என்று கவலையுடன் ஒற்றுக் கேட்டேன். அவர்கள் தொலைவில் மெள்ளப் பேசினதால், எனக்கு எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை.

அவர்கள் திரும்பி வந்தனர்.

தலைவன் பேசினான். அதுதான் அவர்கள் தீர்ப்பின் முடிவு என்று தெரிந்துகொண்டேன்.

66

'ஆல்ஃவிரட் ஹார்வி, உனக்குப் பிழைக்க ஒரு வாய்ப்பு அறிவிப்பதென்று ஒத்துக்கொண்டிருக்கிறேன். நீ அழைத்த கடவுளிடமே உன்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டிருக்கிறோம். உன்னை நாங்களாக மீன்களுக்கு இரையாக எறியப் போவதில்லை; தூக்கிடவும் போவதில்லை; பாறையைப் பற்றிக் கொண்டு கடலின்மீது தொங்கவிடப்போகிறோம். நீயாக உறுதியாகப் பிடித்துக் கொண்டு இருந்தால், காலையில் போவார் வருவார் யாரையாவது கடவுள் அனுப்பி உன்னைக் காப்பாற்றுவார். இத்துடன் எங்கள் பொறுப்பு முடிந்தது. நாங்கள் போகிறோம்,” என்றான் அவன்.

என்னை இப்போது பல கைகள் தூக்கின. என் வாய் மீட்டும் அடைக்கப்பட்டது. கண்கள் இறுக்கப்பட்டன. எவ்வளவு தொலை தூக்கிச் சென்றனர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சிறிதுநேரத்தில் அவர்கள் நின்றனர். பாறையின் அருகுக்கு வந்துவிட்டதாக உணர்ந்தேன்.