உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

||–

அப்பாத்துரையம் - 35

பணியாளரைக் கொன்றிருக்கிறாய். அதே சமயம் உன் மூலமும் மற்றக் கப்பலோட்டிகள் மூலமுமே எங்களுக்கு இவ்வளவு தேறலும் செல்வமும் கிட்டியிருக்கிறது. ஆகவே, உங்கள் அனைவரின் உயிரையும் காப்பாற்றுகிறோம்.ஆனால் உங்களைக் கெய்ரோ நகரில் விற்பதன் மூலம் அவற்றின் விலையை நாங்கள் பெறுவோம். நாங்கள் உங்கள் தேறலை அருந்தி மகிழ்ச்சியாயிருக்கிறோம். நீங்கள் பிழைத்துப் போங்கள்'

66

""

'கடற்கொள்ளைக்காரர்களின் தலைவன் பேச்சிலுள்ள கேலியின் பொருள் இப்போது தெற்றென விளங்கிற்று. எல்லாருக்கும் எல்லா வகையிலும் ஆதாயந்தந்த அவன் தீர்ப்புக் கேட்டுக் கொள்ளைக்கார மக்கள் அனைவரும் களித்துக் கூத்தாடினர்.’

""

"கெய்ரோவில் கப்பலோட்டிகளும் நானும் விற்கப் பட்டோம். கப்பலோட்டிகள் தம் நிலைமைக்கு வருந்தி நின்றனர். அவர்களைக் கொள்ளைக்காரரும் நன்கு நடத்த வில்லை. வாங்குபவர்களும் குறைந்த விலையே கொடுத்தார்கள். என் வாழ்க்கை முழுவதுமே இன்பதுன்ப வேறுபாடாயிருந்த தனால், நான் என் நிலைமையை இயல்பென்று வாளா அமைதியுடன் இருந்தேன். கொள்ளைக்காரர் நன்றாக நடத்தினார்கள். செய்ரோவில் அடிமைச் சந்தையில் நீங்களும் நல்ல விலைகொடுத்து வாங்கி இதுவரை மதிப்புடனும் அன்பாகவுமே நடத்தி வருகிறீர்கள்.”

66

“என் அடிமை வாழ்வில் அடிமைகள் நடத்தப்படுவது போன்று நான் கொடுமையாக நடத்தப்படவுமில்லை. அடிமைகளைப்போல நான் நடந்து கொள்ளவுமில்லை. உண்மையில் தங்களிடம் அடிமையாயிருக்கும்போது நான் காணும் அமைதி. இதுவரை எங்கும் எனக்கு இருந்ததில்லை.”

"நான் மீட்டும் விடுதலை பெற்றால் முன்போன்ற சூழல்களில் சிக்கி இன்னும் பழிகள் செய்ய நேருமோ என்று அஞ்சுகிறேன். ஆகவேதான் உங்கள் அடிமையாகவே இருந்து என் குறைநாளையும் இன்றுபோல எவருக்கும் தீங்க செய்யாத நல்வாழ்வாகக் கழிக்க அவாவுகிறேன்.”