உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

66

165

'அது ஒரு தீவின் கரையோரம். தீவிலுள்ள மக்கள் குரல் என்னைச் சுற்றிக் கேட்டது. அவர்கள் மிடாவை உருட்டிச் சென்றனர். நான் சிறிது நேரம் அரவம் காட்டவில்லை. காட்டினால் அவர்கள் அச்சத்தால் மிடாவை அலைவா யருகிலேயே விட்டுவிட்டுப்போய் விடக்கூடும் என்று கருதினேன். சிறிது தொலை சென்ற பின் நான் மிடாவைத் திறந்து என்னை வெளி யேற்றும்படி வேண்டினேன்."

“நான் நினைத்ததுபோல முதலில் அவர்கள் மிடாவுக்குள்ளிருந்து மனிதக் குரல் கேட்டு அஞ்சினார்கள். நான் அவர்கள் அச்சந் தெளிவித்தேன். 'நான் ஒரு கப்பலின் தலைவன். கப்பலோட்டிகள் எனக் கெதிராகக் கிளர்ச்சி செய்து என்னை மிடாவில் அடைத்துக் கடலில் உருட்டிவிட்டு, என் கப்பலையும் செல்வத்தையும் எடுக்கச் சூழ்ச்சி செய்தார்கள். அவ்வளவே என் கதை. என்னை வெளியேற்றி உதவுங்கள்' என்றேன்.

“நான் வெளியே வந்தேன். களைதீர அவர்கள் எனக்குத் தேறல் அளித்தனர். ஆனால், என் அவப்போது இங்கும் தொடர்ந்தது. நான் வந்த கப்பல் கடலருகே வந்து உடைந்தது. அதிலுள்ள பொருள்கள் பலவும் அலையில் மிதந்து கரையருகே வந்தன. மக்கள் அவற்றை எடுத்ததுடன் கப்பலோட்டிகளிலும் சிலரை மீட்டனர். கப்பலோட்டிகள் மூலம் என்னைப் பற்றியும் அவர்கள் கேள்விப்பட்டார்கள். ஆகவே, என் கதையிலுள்ள நம்பிக்கை தளர்ந்தது."

"தீவின் மக்கள் நடுநிலக் கடலிலேயே பேர்போன கடற்கொள்ளைக் காரர்கள். நான் அவர்கள் தலைவன்முன் கொண்டு நிறுத்தப்பட்டேன். அவர்கள் கொள்ளைக் காரர்களாதலால், என் வியத்தகு இடர்களின் கதை கேட்டு என்மீது இரக்கங்கொள்ளக்கூடும் என்று நான் நினைத்தேன். ஆகவே, தலைவன் கேள்விக்கு மறுமொழியாக நான் என் கதை முழு வதையும் எதுவும் விடாமல் கூறினேன்'

""

“தலைவன் என்னை ஏற இறங்கப் பார்த்தான். அவன் முகத்தில் கருணையும் இல்லை; கடுமையும் இல்லை. கேலி, நகைச்சுவை, மகிழ்ச்சி தாண்டவமாடின.

"நீ கூறுகிறபடி பார்த்தாலும் நீ ஓர் அடிமையைக் கொன்றிருக்கிறாய். ஒரு யூதனைக் கொல்ல உதவியிருக்கிறாய்.ஒரு