உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாத்துரையம் - 35

(164) || கேட்கவில்லை. எங்கு தேடியும் காணாததால், கடைசியில் அவன் சொற்களை நம்பி வெளியேறி னார். கப்பல் புறப்பட்டது."

66

'ஆனால் முறைநாயகர் மீகாமனிடம் என் தேறல் மிடாக்களையும் என் செயல்களையும் அம்பலப்படுத்தி விட்டார்."

"கப்பல் புறப்பட்டபின் நான் வெளிவர விரும்பினேன். மிடாவில் உள்ள புழுக்கமும் தேறலின் வாடையும் என்னை வதைத்தன. ஆனால், எவரும் வந்து மிடாவைத் திறந்து விடவில்லை. கப்பலோட்டிகள் பேச்சிலிருந்து அவர்கள் எண்ணம் எனக்குத் தெரிந்தது. என்னை கடலில் மிடாவோடு எறிந்துவிட்டு என் சரக்குகளையும் செல்வத்தையும் கைக்கொள்ளவே அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று அறிந்தேன்.”

வெளியே

"நான் மிடாவுக்குள்ளிருந்தே என்னை விட்டுவிட்டுச் சரக்குகளை எடுத்துக்கொள்ளும்படிக் கெஞ்சினேன். எதுவும் பயனில்லை. உள்ளே புழுக்கம் தாங்காமல், 'கடலில் எறிவதானால் இப்போதே எறிந்து விடுங்கள்' என்று மன்றாடினேன். அவர்கள் என் துயர் கண்டு களித்தனரேயன்றி எவ்வகையிலும் இரங்கவில்லை. நான் கொலைகாரன் என்ற எண்ணம் அவர்கள் உள்ளத்தைக் கல்லாக்கியிருந்தது.'

66

ஆனால், கப்பல் திடுமெனப் புயலில் சிக்கிற்று. பழிகாரனாகிய என்னால்தான் கடல் சீறுகிறது என்று ஒருவன் சொல்ல, மற்றவர்கள் அதை ஏற்று என்னை மிடாவுடன் உருட்டிக் கடலில் எறிந்தனர். புயலும் அலையும் மிடாவை உருட்டி உருட்டிக் கவிழ்த்தன. நான் மிகவும் அலைக்கழிக்கப் பட்டேன். அத்துடன் மிடாவின் சிறு துளை கடலுக்குள் அமிழும்போதெல் லாம் நீர் உள்ளே வந்து மிடா அமிழாமல் நான் அதைத் துணியால் அடைக்க வேண்டியவனானேன். அது மேலே எழுந்தபோதெல்லாம் சிறிது நேரமாவது நல்ல காற்று உட்கொள்ளும்படி அதைத் திறந்துவிட வேண்டியவனானேன். இறுதியில் கொஞ்சங் கொஞ்சமாகத் தண்ணீர் உள்ளேறி மிடா அமிழத் தொடங்கியது. இனி உயிர் போனது போலத்தான் என்று நான் சாவுக்கு ஒருங்கினேன். ஆனால், அலை தாழ்ந்ததும் மிடாவுடன் நான் அலை வாயருகே மணலில் கிடந்தேன்.”