உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

163

‘அந்த விலையை கொடுக்கிறேன். என் வீட்டுக்கு அனுப்பு’ என்றார்.

"போங்கள்; அனுப்புகிறேன் என்றேன். அவர் என் கண்முன்னா லேயே அவற்றை அனுப்பி வைத்து விட்டு மறுவேலை பார் என்றார்.

"வேறு வழியில்லாமல் மூன்று திருமேனி மிடாக்களையும் இழந்தேன். அத்துடன் எப்படியும் அவற்றால் என் மறைசெய்தி வெளிப்பட்டுவிடு மாதலால், நான் சுமர்னாவை விட்டே ஒடிவிட எண்ணினேன். முறை நாயகரிடமே இதைத் தெரிவிக்கவும் எனக்கு ஒரு வாக்குப் போக்கு ஏற்பட்டது. வாணிகத்துக்கு உயிர்நிலையாக மிடாக்கள் போனபடியால், நான் அதை மூடிவிட்டுப் போகவேண்டியவனானேன் என்று தெரிவித்தேன்.”

"காலமும் இடமும் வாய்ப்புகளும் இதுவரை எனக்கு மலைபோல வந்த இடர்களைப் பனிபோல் அகலச் செய்திருந்தன. ஆனால், இப்போது அவை எனக்கு எதிராகச் செயலாற்றத் தொடங்கின. புயல்காற்று எழுந்து நான் சென்ற கப்பலை மீட்டும் சுமர்னாவுக்கே கொண்டு வந்து சேர்த்தது. மீண்டும் வேறொரு கப்பலில் என் சரக்குகளை ஏற்றிக் கொண்டு கார்ஃவு என்ற இடத்துக்குப் புறப்பட்டேன், ஆனால், புறப்படும் நேரத்துக்கு முன்பே வேறொரு படகில் முறைநாயகன் கப்பலை நோக்கி வருவது கண்டேன்.”

நான்

என்னைக்

"நான் கப்பல் மீகாமனிடம் சென்று என் உயிருக்குத் தப்பி ஓடுவதால் முறைநாயகனிடமிருந்து காக்கவேண்டுமென்றும், காத்தால் நிறையப் பாருள் தருவதாகவும் கூறினேன். 'உன்னைக் காக்க எப்படி நான் உதவ முடியும்?' என்று கேட்டான், மீகாமன்”

"எனக்கு மிடாவின் நினைவு வந்தது. முன் இரு உடல்களைக் கொண்ட அவை நான் ஒளிந்து இருக்கவும் உதவும் என்று கண்டேன்.மீகாமன் இக்கருத்தை எற்றான்.”

நான்

மிடாவில் என்னை வைத்துமூடியிட்டு ஆணி அறைந்தனர். "முறைநாயகர் மீகாமனிடம் என்னைப்பற்றி உசாவினார். கடலில் விழுந்து விட்டதாகக் கூறியதை அவர்