உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(162

||–

அப்பாத்துரையம் - 35

என் வாணிகம் முன்னிலும் தழைத்தது. தேறலுக்குச் சுவையூட்டஇப்போது ஒன்று,இரண்டு,மூன்று திருமேனிகளாயின.”

66

“ஆயின், அந்தோ, பலநாள்திருடன் ஒருநாள் அகப்படு வான் என்ற பழமொழியை நான் மறந்து இறுமாப்படைந்தேன்.”

66

என் தேறல் நிலையத்துக்கு ஒரு நாள் சுமர்னாவின் முறைநாயகர் வந்திருந்தார். என் தேறலின் புகழே அவரை அங்கே கொண்டுவந்தது. இது எனக்கு ஒரு பெரிய நன்மதிப்புக்குரிய செய்தியாதலால், நான் அவருக்கு முகமன் கூறி வரவேற்றேன். என் தேறலின் பெருமைகளைக் கூறுகையில் 'காலஞ்சென்ற பணியாளருக்கு நான் மிடாமிடாவாக அனுப்பிவைப்பது வழக்கம்' என்றேன்”

'ஆம். கலங்களில் பணியாட்களை விட்டு வாங்க விடுவது அவ்வளவு நல்லதல்லதான். நானும் அவ்வாறே மிடாமிடாவாக வரவழைத்துக் கொள்கிறேன். முதலில் உன்னிடமுள்ள மிடாக்களை யெல்லாம் நான் சுவைத்துப் பார்க்கட்டுமா?' என்றார்.

66

"அவர் மிடாக்களை ஒவ்வொன்றாகச் சுவைத்துப் பார்த்தார். கடைசியில் உயர்மேடை மீதிருந்த மூன்று மிடாக்களையும் சுட்டிக்காட்டி 'இவற்றில் என்ன தரம் வைத்திருக்கிறாய்?' என்று கேட்டார். நான் 'அவை வெற்று மிடாக்கள்' என்றேன். அவர் கோலால் தட்டிப் பார்த்து 'அவை வெற்று மிடாக்கள் என்று ஏன் பொய் கூறி ஏமாற்றுகிறாய். அவற்றிலிருந்து தேறல் ஊற்றிக் கொடு' என்றார்.வேறு வழியின்றி மூன்றிலிருந்தும் மூன்று கலங்கள் ஊற்றிக் கொடுத்தேன்.”

மூன்றும் முதல்தரமாயிருக்கக் கண்டதும் என் மீது அவர் சீற்றங் கொண்டு 'இந்த மிடாக்கள் மூன்றையும் நான் எடுத்துக்கொள்கிறேன்' என்றார்.

66

"அம்மூன்றுமே நான் பிறவற்றுக்குச் சுவையூட்ட பயன்படுத்துபவை. ஆகவே, அவற்றின் விலைமிக உயர்வு’ என்றேன்.

“அப்படி என்ன விலை இருக்கும்?” என்று கேட்டார்.

ப்

“அவர் வாங்க விரும்பாதிருக்கத்தக்க முறையில் ஐந்து அல்லது ஆறு மடங்கு விலை கூறினேன்.'