உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

161

'அன்று அவரிடம் அதைக் கூறியிருக்கக் கூடாது என்பதைக் கூறியபின்தான் அறிந்தேன். அவர் உடனே என்மீது பாயத் தொடங்கினார். 'அவர் கொலையாளி அல்ல என்றால், நீதான் கொலையாளி. இப்போது என்ன செய்கிறேன் பார். உனக்கும் உன் தலைவன் முடிவை அளித்துவிட்டுப் போகிறேன்' என்று கூறிக்கொண்டு என்னைப் பிடிக்க வந்தார்.’'

""

"நானே இப்போது என் உயிருக்கு மீட்டும் இடரை உண்டுபண்ணிக் கொண்டேன். ஆனால், என்னைவிட அவர் மிகுதி குடிவெறியுடைய வராயிருந்ததால், சறுக்கி விழுந்தார். அவர் எழுந்தால் என் உயிர் அவர் கையில் இருந்திருக்கும். அதற்கு இடங்கொடாமல் நான் அவரைக் காலைப்பிடித்துப் பரபரவென்று இழுத்து, கால் பங்கு தேறல் நிறைந்த ஒரு மிடாவில் திணித்துவைத்து அவர் இன்னதென்றறியுமுன் மூடியால் அழுத்தி ஆணியடித்து மிடாவை உருட்டிவிட்டேன். அவர் திருமேனி அடங்கிய மிடாவும் இங்ஙனம் அடிமை மிடாவுடனும் என் தலைவர் மிடாவுடனும் இடம் பெற்றது.”

“என் உயிர் தப்பிற்று. ஆனால், பணியாளர் மறைவுக்கு மக்கள் உள்ளத்தில் இயற்கையான ஒரு விளக்கம் இல்லா விட்டால், என் மீது ஐயம் எழும். ஆகவே நான் அவர் வாளை எடுத்துக்கொண்டு சென்று, வெளியே நின்ற அவர் குதிரையின் கட்டவிழ்த்து, அதன் உடலைப் பலவிடங்களில் வாளால் குத்திக் காயப்படுத்தினேன். அது குற்றுயிருடன் ஓடிக் கீழே விழுந்தது. பின் கத்தியைக் கழுவித் துப்புரவாக்கி வைத்துக்கொண்டேன்.”

66

'நள்ளிரவில் குதிரை ஓசை கேட்டுப் பல மக்கள் எழுந்துவந்து பார்த்தனர். நானும் அப்போதுதான் வருபவன் போல 'ஐயோ! விளக்கு வைத்து ஒரு நாழிகைக்குமேல்தானே போனார்! அதற்குள் எந்தப் பாவி குத்தி விட்டானோ' என்று கூவி வருந்தினேன். அவர் போகும்போது வைத்து விட்டுப் போனதாகக் கூறி, அவர் வாளையும் எடுத்துவந்து காட்டினேன். எல்லாரும் ‘வழியில் பணியாளர் தாக்கிக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். குதிரையும் காயப்பட்டே ஓடிவந்திருக்க வேண்டும்' என்று எண்ணினர்.”