உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(160)

||–

அப்பாத்துரையம் - 35

சுமர்னா நகரம் கடந்து, தேறல் மாந்தும் உலகெங்கும் பரந்தது. தேறலின் இந் நறுஞ்சுவைக்குரிய காரணம் தெரியாமலே எல்லாரும் குடித்து மகிழ்ந்தனர். நான்மட்டும் அதன் நச்சுச் சுவைக்கு ஆளாகாமல், அதன் ஆதாயத்துக்கு மட்டும் உரியவனானேன்.

"மூன்று ஆண்டுகள் என் வாணிகம் தங்கு தடையற்றுப் பெருகிற்று. பணியாளரும் அடிக்கடி வந்து அதன் ஆதாயத்தில் ஒரு விழுக்காடு பெறுபவர்போலக் குடித்து மகிழ்வார்; அல்லது வாணிகன் திருமேனி இருந்த மிடாவருகில் இருந்து குடித்து அவரைத் திட்டுவதில் தன்னை மறந் திருப்பார். இச்சமயங்களில் அவர் என்னை எவ்வளவுதான் குடிக்கும்படி வற்புறுத்தினாலும், நான் திருமேனி கலவாத தேறலாக எடுத்து ஒரு சிறிதே அருந்திப் போக்குக்காட்டுவேன்.”

66

'இங்ஙனம் நான் எத்தனைப் பழிகளோ செய்ய நேர்ந்தாலும்,பெருங்குடிக்கு ஆளாகாத ஒரு நற்பழக்கத்தால்தான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். அதுமட்டுமன்றி உங்களைப் போன்றவர் நற்பழக்கத்துக்கும் உரியவனாயிருக்கிறேன்.”

"மூன்றாவது ஆண்டில் பணியாளருக்கு வேறு இடத்துக்கு மாற்ற மாயிற்று. அவர் தம் படைவகுப்பை அனுப்பிவிட்டுப் போகுமுன் இறுதியாக என் தேறலை மாந்தவும், வாணிகன் திருமேனியைப் பழிக்கவும் என் நிலையத்துக்கு வந்தார்.”

அவர் அன்று மட்டுமீறிக் குடித்தார். மட்டுமீறி என் தலைவரைப் பழித்தார்.

பணியாளர் தொல்லை இனி இராது என்று நினைத்தவுடன் எனக்கு அவர்மீதிருந்த அச்சம் குறைந்தது. அஃதுடன் சிறிது தேறலும் என்னுள் சென்று என் நாவின் நரம்புகளைத் தளர்த்தியிருந்தது. நான் அவரிடம், "என் தலைவரை நீர் கொன்றதுதான் உண்மை; தலைவர் எந்தக் கொலையையும் செய்யவில்லை” என்றேன்.

அவர் சீறி 'உனக்கு எப்படித் தெரியும்? நீதானே அவர் உன்னையும் கொல்ல முயன்றதாகக் கூறினாய்" என்றார்.

"நான் அடிமையின் உடல் மிடாவில் அடங்கியிருந்தது பற்றிய கதை முழுவதையும் அவரிடம் கூறினேன்.'