உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

66

159

'கடையையும் அதன் சரக்குகளையும் நீ எடுத்துக் கொண்டு வாணிகம் நடத்தலாம். இரண்டு 'முழுமேனி' மிடாக்களையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். நீ அவற்றை வைத்து இந்தப் புதிய தேறல் வாணிக முறையை நடத்தலாம் ஆனால், எப்போதும் நான் என் தேவைக்கு எவ்வளவு தேறல் கேட்டாலும் அனுப்பித் தரவேண்டும். அத்துடன் உன் தலைவர் திருமேனி அடங்கிய மிடாவின் அருகில் நான் வேண்டும்போது இருந்து அதைத் திட்டிக்கொண்டே குடிக்க இணக்கமளிக்க வேண்டும்,” என்றார்.

“நான் இரண்டு கட்டுப்பாடுகளையும் ஒத்துக்கொண்டேன். வெளியாருக்கு நான், நடந்த செய்திகளில் எதையும் வெளியிடவில்லை. என் தலைவர் சிறைப்படுத்தப்பட்டார் என்றும், அவர் கடையை அவர் பங்காளி என்ற முறையிலேயே நான் நடத்துகிறேன் என்றும் சிலநாள் கூறினேன்.

66

ரண்டு திருமேனிகளடங்கிய மிடாக்களும் மற்றவற்றை விட உயர்ந்த இரண்டு மேடைகளில் பணியாளர் விருப்பப்படி வைக்கப்பட்டன. பணியாளர் வேண்டும்போது நான் கேட்ட கேட்ட அளவு தேறல் அனுப்பித் தந்தேன். அத்துடன் சிலநாள் இரவு நேரங்களில் அவர் கடையிலேயே தங்கி, என் தலைவர் திருமேனி இருந்த மிடாவினருகில், அவரைத் திட்டிக்கொண்டே, அவர் திருமேனித் தேறலைக் குடித்துக் கொண்டிருப்பார்."

த்தகைய சமயங்களில் அவர் அடிக்கடி தன்னுணர் வில்லாமல் கிடப்பதும் உண்டு.

"பணியாளர் வகையில் எனக்கு எவ்வளவு தேறல் சலவானாலும், அதை நான் சட்டை செய்யவில்லை. தற்செயலாக நான் கண்ட தேறல் வாணிக மறைமுறையை நான் என் தன்னறிவு கொண்டு இன்னும் வளர்த்தேன். திருமேனித் தேறலை நான் மற்ற மிடாக்களில் கலந்து அவற்றுக்கும் அதன் சுவையை ஊட்டினேன். இவ் வகையில் எல்லா மிடாவின் தேறல்களுமே பலதரப்பட்ட திருமேனித் தேறல்களாயின. கலப்பின் அளவு கண்டு அவற்றை நான் பல தரங்களாகப் பிரித்தேன்.”

பொதுவாகத் தேறல் விற்கும் விலையைவிட அவற்றின் விலையைப் பல தரங்களாக ஏற்றினேன். என் தேறலின் புகழும் அதனால் எனக்குக் கிடைத்த பெருஞ் செல்வத்தின் புகழும்