உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(158) ||

66

அப்பாத்துரையம் - 35

அவருக்கு இசைய எப்படியாவது பேசிச் சமாளிக்க எண்ணினேன் நான். 'ஆம். பல ஆள்கள் திடுமென மறைந்ததுகண்டு நான் வியப்படைந்ததுண்டு. ஆனால், செய்தி விளங்கவே இல்லை. இப்போதல்லவா தெரிகிறது,' என்றேன்.”

66

"இந்த விடை அவருக்குப் பிடித்தமாயிருந்தது. 'நீயும் நானும்கூட இவன் தேறல்பட்டியலில் ஒரு நாள் போயிருப்போம். நல்லகாலமாகப் பிழைத்தோம். அத்துடன் சுமர்னா நகரில் எத்தனையோ பேர் உயிரையும் காப்பாற்றினோம்.' என்றார்.”

"உயிர் பற்றிய என் அச்சம் தணிந்தது. இனிமேல் ஆகவேண்டிய காரியத்துக்கு அடிகோலத் துணிந்தேன்.”

66

ஆம். உடனடியாக அடுத்த பலியாக அவர் என்னைத் திட்ட மிட்டிருந்தார் என்று இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால், என்னுடன் இருந்த அபிசீனிய அடிமை திடுமென மறைந்துவிட்டான். நானும் முழுதும் அறியாவிட்டாலும் முன்னெச்சரிக்கையுடன்

சிறிது

வெளியேறிவிட எண்ணினேன். ஆனால், என்ன காரணஞ் சொல்லியும் மறுத்ததுடன், எப்படியாவது என்னை ஆவல்காட்டித் தங்கவைக்கும்படிக் கடையிலேயே எனக்குப் பங்கு எழுதித்தந்தார். என்னை அவர் பலியிடத் தீர்மானிக்க வில்லையானால், பணப்பேராவல் பிடித்த அவர் இதைத் செய்ய முன் வந்திருக்கமாட்டார் என்பது இப்போது விளங்குகிறது. இதோ பாருங்கள் அந்தப் பங்குப் பத்திரத்தை! என்று தலைவர் எனக்குத்தந்த பத்திரத்தைக் காட்டினேன்.

66

தைப் பார்த்தபின் வாணிகன்பற்றிய தம் கருத்தில் அவருக்கு முழு உறுதி ஏற்பட்டுவிட்டது."

"நீ நற்பேறுடையவன்தான், ஐயமில்லை. ஏனென்றால் நீ உயிர் தப்பியதுடன், இதனால் அவர் செல்வத்துக்கு முழு உரிமையாளனாகவும் வழி இருக்கிறது. ஆனால், இதில் உனக்கு என் ஒத்துழைப்பு இல்லாமல் முடியாது.நீ என் கட்டுப்பாட்டுக்கு இணங்கினால், நான் ஒத்துழைக்கவும், உன்னிடமே இந்த வாணிகத்தை ஒப்படைக்கவும் வழி செய்யமுடியும்” என்றார்.

"பருத்தி புடவையாய்க் காய்த்தது போன்ற மகிழ்ச்சியுடன் நான், ‘தங்கள் விருப்பப்படியே நடக்கிறேன்' என்றேன்.