உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

157

"பணியாளர் ஒன்றும் பேசவில்லை. மெல்ல நகைத்துக் கொண்டு மிடாவிலுள்ள தேறலை வேறு கலங்களில் மாற்றும்படி ஏவலாளர்களை ஏவினார். அது முடிந்ததும் அவர் வாணிகன் பக்கம் திரும்பினார். அவர் முகம் திடுமெனக் கடுமை மேற்கொண்டது."

"நானும் மனிதப்பாசம் உடையவன்தான்.நீரும் மனிதப்பாசம் உடையவர்தான். உம்மைத்தான் நான் எல்லாவகையிலும் பின்பற்ற இருக்கிறேன்.” என்றார்.

“அதன் பொருள் புரியாமல் வாணிகன் விழித்தார். நானும் விழித்தேன். ஆனால், விரைவில் அதன் கோரப் பொருள் விளங்கிற்று. பணியாளர் மறைவான கட்டளை பெற்று ஏவலாளர்கள் என் தலைவரைச் செந்தூக்காகத் தூக்கி வெற்றுமிடாவுக்குள் திணித்தனர். முன்பே ஒழித்து ஊற்றிவைக்கப்பட்ட தேறவை மிடாக் கொள்ளுமட்டும் ஊற்றினார்கள்.என் தலைவர் கூக்குரலிட முடியாமல், துணியைத் தேறலில் தோய்த்து வாயில் திணித்தனர். விரைவில் தேறல் அவர் நெற்றிவரையும் வந்து அவரைத் திக்குமுக்காட வைத்தது.”

“என்னை என்ன செய்வார்களோ என்று நான் நடுங்கி

நின்றேன்.

று

"பணியாளர் என்னைப்பார்த்து, 'மிடாவை வழக்கம் போல் மூடு. இல்லாவிட்டால், உனக்கும் இதே தேறல் விருந்து கிடைக்கும்' என்றார்.”

“தன் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நான் என் தலைவர்மீதுள்ள பாசத்தைத் தூர எறிந்து விட்டு மூடியால் மூடி ஆணிகளைப் பதித்தேன்.”

“அச்சம் இன்னும் என்னை விடவில்லை. பணியாளரின் திடீர்க் கோர உருவம் கொண்ட அவர் இன்னும் என்னென்ன திட்டங்கள் வைத்திருக் கிறாரோ என்று எண்ணி நடுங்கினேன்.”

“என்ன துணிகரக் கொலைகாரன் இவன்? எத்தனை பேரை இந்தமாதிரி ஒழித்து ஆதாயமும் வேறு அடைந்திருக்கிறானோ? சண்டாளன் என்றான்.”