உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156)

அப்பாத்துரையம் - 35

கைகளுடன் திறந்து அப்போதுதான் கண்டு திகிலடைபவன் போல் நடித்தேன்.”

“என் நடிப்புப் பயன் தந்தது. செய்தியறிந்த ஒவ்வொருவரும் என் தலைவர்மீதே பழி சுமத்தினர்.”

66

அடிமை கறுப்பு நிறமாயிருந்தான். இப்போது அவன் உடல் தேறலில் தோய்ந்து வெண்ணிறமாயிருந்தது. அது அடிமையின் உடல் என்று எவரும் அறியவில்லை. ஆகவே உடலுக்கும் எனக்கும் எத்தகைய தொடர்பும் இருந்ததாக யாரும் எண்ணவில்லை. என் தலைவர்தான் தமக்கு வேண்டாத எவரையேனும் மிடாவில் தள்ளி இருப்பார்; அல்லது கொன்று அதில் போட்டிருப்பார் என்று யாவரும் எண்ணினர்."

"கொலைகாரப் பயலே! இப்போது தெரிகிறது, நீ உயர்தரத் தேறல் எப்படிச் செய்கிறாய் என்று” என்று சீறி எழுந்தார்

பணியாளர்.

“வாணிகன் உடல் முதல் தடவையாக நடுங்கிற்று. மறுத்து வாதாடுவதைவிடச் சமாளிப்பது எப்போதும் நல்லது என்பது அவர்பாடறிந்து கண்டமுடிவு. ஆகவே பணிவுடன் "எப்படியோ தெரியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். உங்களுக்கு மிடாவுக்கு மிடா புதிய தேறலே தருகிறேன். என்னை மன்னியுங்கள்” என்றார்.

“சரி, என் பணியாளையேவிட்டு வரவழைக்கிறேன் என்று கூறிய வண்ணம் பணியாளை அனுப்பினார். அவன் புதிய தேறல் மிடாவுடன் வந்துசேர்ந்தான்”

என் தலைவர்

மிடாவை

ஒப்படைத்துவிட்டுப் பணியாளரிடம் விடை பெற்றுச் செல்ல முனைந்தார். நானும் அவருடன் புறப்பட இருந்தேன். அதற்குள் பணியாளர், சற்றுப் பொறுங்கள். உங்கள் தேறலை வீணாக இழக்க வேண்டாம். அதற்கு வழி செய்கிறேன்” என்றார்.

பணியாளர் தேறலுக்கு விலைதான் தரப்போகிறார் என்ற எண்ணத்தினால் வாணிகன், 'ஐயா, நீங்கள் மனிதப் பாசம் உடையவர்கள் என்பதை நான் அறிவேன். நீங்கள் நீடுழி வாழவேண்டும்' என்று முகமெல்லாம் மகிழ்ச்சி ஒளிபொங்கக் கூறினார்.”