உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

155

"எனக்கு இன்னது செய்வது என்று புரியவில்லை. எந்த நொடியிலும் பணியாளர் காவலருடன் வந்து என்னை விலங்கிட்டுச் செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், பாதிப்பங்கோ முழுப்பங்கோகூட எனக்கு என்ன பயன் தரக்கூடும்? ஆனால், என் தலைவர் அன்பு விலங்கில் மாட்டப் பட்டு நான் உள்ளூரத் துடித்துப் புழுங்க வேண்டியதாயிற்று."

“வாணிகன் என்னைப் பாங்காளியாக்கி ஒரு நாழிகை ஆவதற்குள் நான் எதிர்பார்த்த பேரிடி என்முன் வந்து விழுந்தது. தடதடவென்று சிலர் கதவைத் தட்டினர். திறந்தபோது பணியாளர் அனுப்பிய காவல் படைவீரர் நின்றனர்!”

66

டம்

"நடந்த செய்தி இது; தேறல் மிகவும் தித்திப்பா யிருந்ததினாலும், மிடாவில் மூன்றில் இரண்டு பங்கு உடலும் ஒரு பங்கே தேறலுமாய் இருந்ததாலும் பணியாளர் அதை விரையில் காலி செய்துவிட்டார். அது இவ்வளவு விரைவில் காலியானதையும் காலியான பின்னும் கனமா யிருப்பதையும் கண்டு அதில் ஆசூதாயம் நாடிக் கல்லையோ கட்டையையோ வைத்திருப்பதாக அவர் எண்ணினார். வாணிகன்மீது அவர் சீற்றம் பாய்ந்தது. அவர் உடனே காவற்படை நிலையத்துக்கு விரைந்து செய்தி அனுப்பினார்.”

66

சூது எதுவும் அறியாத வாணிகன் அச்சமில்லாமலேயே நடந்தார்; ஆனால், நான் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சென்றேன்.”

“வாணிகனை நோக்கிப் பணியாளர், தேறல் மிடாவுக்குள் என்ன அடைத்துவைத்து எங்களை ஏமாற்றுகிறாய்? நீ நல்ல தேறல் வேறு, அல்லாத தேறல் வேறு விற்பது போதாதா? இப்படிக் கொடுத்த பணத்திற்கும் வஞ்சகம் செய்யவேண்டுமா?" என்று இரைந்தார்.

"நான் அப்படி ஒன்றும் செய்வதில்லையே?” என்றார் அவர்.

"

"நானும் 'அப்படி எதுவும் எங்கள் நிலையத்தில் கிடையாதே என்றேன்.”

"அவர் இரண்டு காவலரை அனுப்பி என் கடையிலிருந்தே திறப்பதற்கான கருவிகளைக் கொண்டு வரும்படி செய்தார். மிடாவைத் திறக்கும்படி என்னைப் பணித்தார். நடுங்கும்