உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

II.

அப்பாத்துரையம் - 35

வாணிகன் சுவைத்துப் பார்த்தார். அவர் ஒத்துக் கொள்ளவே வேண்டியதாயிற்று. ஆனால், வியப்பு அவர் முகத்திலும் நிழலிட்டது. 'இந்த ஒன்றின் சுவையில் மேனி எத்தனையோ மடங்கு பெரிதாகத்தான் இருக்கிறது. ஆனால், இது எப்படி வந்தது என்று எனக்கும்தான் தெரியவில்லை' என்றார்.”

று

"எனக்கு அந்த மிடாவின் சுவை பார்க்கச் சிறிதும் பிடிக்கவில்லை. ஆனால், வேலையின் தேவை கண்டு நானும் சுவைத்துப் பார்ப்பதுபோலப் பாசாங்கு செய்து, ‘ஆகா, ஆகா’ என்றேன். நான் சுவையறியாதவன் என்று யாராவது நினைத்துவிட்டால், வாணிகத்துறையில் என் மதிப்புக் கெட்டு விடும் என்பதை நான் அறிவேன்."இதில் முழுமேனி இருக்கிறது” என்று வாணிகன் உவமையைப் பின்பற்றிக் கூறினேன். ஆனால், உண்மையிலேயே ஒரு முழுத் திருமேனி அதில் இருந்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

"இது போன்ற மேனிவாய்ந்த தேறல்மிடா வேறு இருக்கிறதா என்று பின்னாலிருந்த மிடாக்களையெல்லாம் சுவைத்துப் பார்த்தார் பணியாளர். வேறு இல்லை. எனவே இந்த ஒரு மிடாவின் அருமை பெரிதாயிற்று. அவர் உடனே தம் பணியாட்களை அழைத்து அதைத் தன் வீட்டிற்கே உருட்டிக் கொண்டு போகும்படி கூறினார்."

66

அடிமையின் திருமேனி அடங்கியிருந்த மிடா இங்ஙனம் பணியாளர் வீடு சென்றதுகண்டு, நான் பொறிகலங்கினேன். எப்படியும் இனி அந்த மறை செய்தி அம்பலமாவது உறுதி. அதற்குள் சுமர்னாநகர் விட்டே ஓடிவிடவேண்டுமென்று நான் தீர்மானித்தேன். வாணிகனிடம் உடல் நலிவு, உறவினர் நோய் ஆகிய சாக்குப் போக்குகள் சொல்லிப் பார்த்தேன். பின் வேறு இடத்தில் வேலை செய்ய விரும்புவதாகக் கூறினேன். நான் வந்தபின் வளர்ந்து வரும் வாணிகத்தை எண்ணி அவர் என்னை அனுப்பிவிட மறுத்தார். அத்துடன் நான் மனமார அவருடன் இருக்க விரும்பும்படி செய்வதற்காக அவர் தம் தொழிலிலேயே எனக்குப் பாதிப் பங்கு தருவதாகக் கூறினார். அதைக்கூட நான் ஆர்வத்துடன் வரவேற்காதிருப்பது கண்டு, பாதிப்பங்கு தந்துவிட்டதாக எழுதிக் கையொப்பமிட்ட எழுத்துப் படியையே என்னிடம் தந்து வற்புறுத்தினார்?'