உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

153

வேலை இன்னும் கடுமையாயிற்று. ஆனால், இப்போது கடையின் வேலை முழுவதும் நானே பார்த்ததால், என்றேனும் ஒரு முழுநாள் தனி வாய்ப்புக் கிடைத்தால், என் குறை வேலையை முடித்துவிடலாம் என்றிருந்தேன். அடிமையின் உடல் இருந்த மிடாவை மட்டும் முதல் வரிசையிலிருந்து நகர்த்தி இரண்டாம் வரிசையில் நடுவில் வைத்தேன்.”

66

“ஒருநாள் அரசியற் பணியாளர் ஒருவர் தேறல் வாங்க வந்தார். அவர் வாடிக்கைக்காரர். தேறலில் நல்லது கெட்டது சுவையறிந்து கூறும் இயல்புடையவர். அவர் தலைசிறந்த தேறல்வகை வேண்டுமென்றார். முதல் வரிசை முழுவதையும் வாணிகன் காட்டினார். ஆனால், அதன் தேறல் எதுவும் தமக்குப் பிடிக்கவில்லை என்று கூறி, அவர் இரண்டாவது வரிசையில் அடிமையின் உடல் இருந்த மிடாவைச் சுட்டிக் காட்டி, ‘இதன் தேறலைப் பார்ப்போம்,' என்றார்."

“வாணிகன் கட்டளைப்படி நான் அதிலிருந்து தேறல் ஊற்றிக் கொடுக்க வேண்டியதாயிற்று. சுவையறிந்த அந்தப் பணியாளர் அதை அலக்கழித்துத் துப்பிவிடுவார் என்று எதிர்பார்த்தபடியே ஊற்றிக் கொடுத்தேன். ஆனால், அவர் போக்கு நான் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாயிருந்தது. அவர் அதை ஒருதடவை, இருதடவை, மூன்றுதடவை சுவை பார்த்தார். அவர் முகத்தில் வெறுப்பு இல்லை. காணாத இன்பம் கண்டவன் முகத்தில் தென்படும் களியாட்டமே இருந்தது. "ஓகோ; மிக உயர்ந்த தரத்தை இப்படி ஒளித்து வைத்து எல்லாரையும் போல ஏமாற்றலாம் என்று பார்த்தாயோ? தேவர்களுக்கும் கிட்டாத இத் தெள்ளமுதை வைத்துக் கொண்டு பத்தாம் தரத்தை எனக்குக் கொடுக்கப் பார்த்தாய். அதெல்லாம் முடியாது." என்றார்."

“உயர் குடியாளனான அந்த வாடிக்கைக்காரரின் ஐயந் தெளிவிக்க விரும்பி வாணிகன், 'அப்படி வேறுபட்ட தரங்களே என்னிடம் கிடையாதே, அண்ணா! எல்லாம் ஒருதரந்தானே?’ என்றார்.”

"இதோ! நீரே இதையும் சுவைத்துப்பாரும். முதலில் தந்த தரங் களையும் சுவைத்துப்பாரும். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதை உம்மால் கூட மறைக்க முடியாது,” என்றார் பணியாளர்.