உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152) ||__

அப்பாத்துரையம் - 35

"செத்தவனாகப் பாவனைசெய்து அவன் என்னை ஏமாற்றப் போகிறான் என்றுதான் நான் முதலில் அஞ்சினேன். ஆனால், விரைவில் வேறுவகையான அச்சங்கள் எழுந்துவிட்டன. வாணிகன் வந்தால் என்ன சொல்வது? அதைவிட, காவல்துறை யாட்கள் வந்துவிட்டால் என்ன செய்வது? ஏழைகள் என்றால், சிறிது ஐயத்துக்கு இடமிருந்தால்கூட மறு பேச்சில்லாமல் தண்டனைக்கு ஆளாகவேண்டிவருமே!" என்று கலங் கினேன்.

“வாணிகன் வரும் நேரமாயிற்று. எப்படியாவது உடலை மறைத்து வைத்து, அன்று தப்புவோம் என்ற எண்ணத்துடன் பெருமுயற்சியின் மீது அவன் உடலை ஒரு மிடாவுக்குள் ஒளித்துவைத்தேன். மிடாவின்மீது மூடிப்பலகை பொருத்தித் தற்காலிகமாக ஆணியும் அறைந்துவைத்தேன். உடலை வேறெங்காவது ஒளித்து வைப்பதென்றும் அடிமை காணாமற் போனதற்கு எதேனும் பொருத்தமான கதை கட்டிவிடுவதென்றும் உறுதி செய்தேன்.”

"என் திட்டங்களுள் இரண்டாவது திட்டம் எளிதாயிற்று. வாணிகன் வந்ததும் அடிமை என்னை அடிக்கவந்த கதையைச் சற்று மாற்றி அவன் அடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடிப்போய் விட்டான் என்றேன். வாகின் அவ்வளவு உடல் வலுவுள்ள அடிமையை இழக்க மனமில்லாதவராயிருந்ததனால், அவனை எப்படியும் பிடித்துவிட எண்ணி, காவல் துறைக்கு அறிவித்தார். காவல்துறையாளர் எங்கும் தேடியும் காணதபோது, அவன் எங்கேனும் கடலில் மூழ்கி இறந்திருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.”

"ஒரு திட்டம் இவ்வாறு எதிர்பாராவகையில் நிறைவேறிற்று. ஆனால், என்னுடைய முதல் திட்டம் எதிர்பாரா வகையில் தடைப்பட்டுவிட்டது. அன்று இரவு வாணிகன் தன்னுடனே என்னை இட்டுச் சென்றதால் உடலை அப்புறப்படுத்த முடியவில்லை. மறுநாள் முழுதும் இருந்தால் பிணத்தின் நாற்றத்தால் காரியம் கெட்டு விடுமே என்று நினைத்து நான் அதில் சிறு துளைசெய்து தேறலைவிட்டு நிரப்பிவைத்தேன். தேறல்சத்து உடலைக் கெடாது பாதுகாக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். இம்முறையில் நான் உடனடியாக அகப்படாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால், உடலை அப்புறப்படுத்தும்