உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

151

கொலைகளையும் நயவஞ்சகங்களையும் நன்றிக் கேடுகளையும் துணிந்து செய்பவனாக்கியவனும் அவனே."

'வாணிகன் தரும் தண்டனைகளைப் பொருட்படுத்தாமல் சிரித்துக் கழித்த அடிமை, நான் தண்டித்தால் சீறுவான். அப்போது அவனைக் காணவே எனக்கு அச்சமாயிருக்கும். இதனால் நான் அவனை வேலை செய்யும்படி கண்டிப்ப தெல்லாம் வாணிகன் முன்னிலையில் மட்டுமே. அவர் இல்லாத சமயத்தில் அவன் திசைக்குச் செல்ல மாட்டேன். ஆனால், ஒருநாள் வாடிக்கைக்காரன் ஒருவனுக்காக அவன் எடுத்து வைக்கவேண்டிய மிடாவை எடுதுவைக்காததுடன், அந்த மிடாவின்மீதே படுத்துக் குறட்டை விட்டு உறங்கினான். அவனை எழுப்பாமல் வேறு வழியில்லை. நான் என்னாலான மட்டும் எழுப்ப முயன்றும் அவன் எழுந்திருக்கவில்லை. அத்துடன், இன்னும் ஓசை செய்தால், எழுந்து கழுத்தை நெரித்து விடுவேன் என்று அச்சுறுத்தினான். நான் வாணிகன் வரும்வரை பேசாமலிருந்துவிட்டு, அவர் வந்தபின் மீண்டும் போய் எழுப்பினேன். உடையவர் வந்ததை அறியாத அவன், உடனே சீறிஎழுந்து என்மீது பாயவந்தான். அதற்குள் யூத வாணிகன் கழிகொண்டு அவனைத் தண்டிக்கப் புறப்பட்டார். அது கண்டதே அவன் வழக்கத்துக்கு மீறி நல்ல பிள்ளையாக நடந்து கொண்டான்.'

66

"ஆனால், வாணிகன் சென்றவுடன் நான் அவனைக் காட்டிக்கொடுத்ததற்காக என்மீது பழிவாங்கத் தொடங்கினான். அவர் எறிந்த கழியை எடுத்துச் சுழற்றிக் கொண்டே என்னை நோக்கி வந்தான். நான் ஒரு மிடாவின் அருகே சென்று அதைச் சுற்றிச்சுற்றி வந்தேன். அவனும் சுற்றிச்சுற்றி வருகையில் ஒரு முக்காலி தட்டி விழுந்து விட்டான் இன்னும் கோபத்துடன் என்னைத் தாக்குவான் என்று எண்ணி நான் தற்காப்புக்காக ஒரு சுத்தியை எடுத்து வைத்துக்கொண்டேன். அவன் எழுந்திருக்கு முன், என் காலைப் பிடித்து இழுக்கவும் காலைக் கடிக்கவும் முயன்றான். நான் கையிலிருந்த சுத்தியலால் அவனைத் தாக்கினேன். ஆனால், நான் சற்றும் எதிர்பாராவகையில் சுத்தி நெற்றிப் பொட்டில் பட்டது. அவன் உடனே வாய்பிளந்து பேச்சு மூச்சற்று விழுந்தான்.”