உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150)

||–

அப்பாத்துரையம் - 35

"நான் கிரீசில்தான் பிறந்தேன். ஆனால், என் தாய் தந்தையர் எழைகளாதலால், என்னை ளமையிலேயே சுமர்னா நகரத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்கள்.”

"என் தந்தை குடியேறலுக்கான மிடாக்கள் செய்யும் தொழிலை மேற்கொண்டிருந்தார். இதிலேயே நானும் பழகினேன். தந்தை வருவாய் மிகவும் குறைவானதால், செல்வமிக்க ஒரு யூதத் தேறல் வாணிகனிடம் நான் சம்பளத்துக்கு வேலை செய்யும்படி அனுப்பப்பட்டேன்.”

“என் இருபதாம் வயதுக்குள் தாய்தந்தையர் இருவரும் தம் வறுமை வாழ்வுக்கு விடைகொடுத்து விட்டனர். எனக்குப் பணமோ வீடோ இல்லாததால்,யூத வாணிகனிடம் வேலைசெய்த துடன் அவன் வீட்டிலேயே தங்கினேன். அவனும் பெண்டு பிள்ளையற்றவன். ஆதலால் நான் கடைசியில் அவன் வேலைக் காரனாக மட்டுமன்றி, வீட்டில் வேலை செய்பவனாகவும் அவன் நம்பிக்கைக்குரிய பிள்ளையாகவும் இருந்து வேலை பார்த்தேன்”

“யூத வாணிகனுக்குப் பிள்ளை இருந்தால்கூட என்னை நம்பிய அளவு நம்யிருக்கமாட்டான். அவன் இறந்தால் பிள்ளைக்கே அவன் செல்வம் சேருமாதலால் பிள்ளையா யிருப்பவன் அவன் சாவுக்கே காத்துக் கொண்டிருக்கக்கூடும். ஆனால், நானோ அவன் வாழ்வுக்குப்பின் அவன் செல்வத்தை அவன் அணுக்க உறவினரிடம் விட்டுவிட்டு, மீண்டும் துணை யிலியாகத் திரிய வேண்டுபவன். இந்த எண்ணம் வாணிகன் உள்ளத்தில் என் மீது மாறா நம்பிக்கையை உண்டுபண்ணிற்று."

"வாணிகனிடம் ஒரு அபிசீனிய நாட்டு அடிமை வேலை செய்தான். அவன் பாரிய உடலும் வலிமையும் உடையவன். மிகப் பெரிய மிடாக்களைக் கூட அவன் எளிதாகத் தூக்கிவிடுவான். அவன் குடிக்கத் தொடங்கினால், மிடாக்களிலுள்ள தேறலின் பெரும் பகுதிக்கு அவன் உடலே கொள்கலமாய்விடும். இத்தகையவனைக் கட்டி மேய்த்து வேலை வாங்குவது என் வேலைகளில் ஒரு தலைமையான பகுதியாகவும், அதே சமயம் நான் விரும்பாத மிகக் கடுமையான பகுதியாகவும் இருந்தது."

66

என்னை அடிக்கடிச் செல்வவானக்கியவனும் அவனே. ஆனால், மீண்டும் மீண்டும் என்னைப் பழிகாரனாக்கி, அஞ்சாத