உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

149

நீக்கவேண்டாம். உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கருத்தை மாற்றிக் கொண்டாலல்லாமல் நான் அமைதியடைய மாட்டேன்,” என்றான் அவன்.

அவன் விரும்பியபடியே நான் என்

கருத்தை மாற்றிக்கொண்டு விட்டேன். ஆனால், அவன் மனப்பான்மை எனக்குப் பெரும் புதிராயிருந்தது. அதை அறிய ஆவல் கொண்டேன்.

"தம்பி, அடிமையாயிருக்க யாரும் விரும்பமாட்டார்கள். அடிமையாகவே பிறந்தவர்கள்கூட அதை ஒழிக்க வாய்ப்பு நேர்ந்தால் துள்ளிக் குதிப்பார்கள். நீ ஏன் அடிமையாகவே இருக்க விரும்புகிறாய்?" என்று கேட்டேன்.

"நான் செய்த பழிகள் அத்தனை, ஐயனே! அவற்றின் பயனாகத்தான் அடிமையானேன். ஆனால், அடிமையான பின் எனக்கு அமைதி கிடைத்தது. அடிமையாகப் பல தொல்லை களுக்கு ஆளாவதனால் எனக்கு இன்னும் மன நிறைவு ஏற்படுகிறது. ஏனென்றால், நான் செய்த பழிகளுக்கு இவை தக்க தண்டனை என்று நினைக்கிறேன். தண்டனை பெறுவது ஒன்றினால்தான் என் பழிகளின் வன்மை குறையக்கூடும். என் பழிகள் யாருக்கும் தெரிய வராமலும், அவற்றால் எனக்கு இகழ் இல்லாமலும் இருந்தாலும், என் உள்ளம் என்னை மதிக்க வேண்டுமானால், தண்டனைகள் மூலம் நான் அவற்றின் கோர நினைவுகளைக் கழுவியாகவேண்டும்,” என்றான்.

இச்சொற்கள் அவன் வாழ்வை அறியவேண்டும் என்ற ஆவலை என்னிடம் வளர்த்தன. இதை அவன் அறிந்ததும் மகிழ்ச்சிகரமாகத் தன் வாழ்க்கை வரலாற்றைக் ஏற்றுக்கொண்டான்:

66

கூற

யாரிடமாவது என் பழிசார்ந்த வாழ்க்கையை எடுத்துரைத்தால், எனக்கும் ஒருவகையில் அதன் பளுக்குறையும். உங்களிடம் கூறுவதற்கு நான் இன்னும் மகிழ்ச்சியடைகிறேன். ஏற்கெனவே உங்கள் நேசத்தைப் பெற்றதனால் நான் சிறிது மனிதனானேன். என் கதை கேட்ட பின்பும் உங்கள் நேசம் நீடித்தால், எனக்கு வானகத்தில் மன்னிப்புக் கிடைக்கும் என்பதற்கு அது ஒரு நல்ல அறிகுறியாயிருக்கும்.