உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. கிரேக்க அடிமை

என்னிடம் ஒரு கிரேக்க அடிமை இருந்தான். அவன் தி டமான உடல் உடையவன். நன்றாக வேலை செய்வான். எவரிடமும் அன்பாகப் பழகுவான். யார் என்ன சீற்றம் காட்டினாலும், வாய் பேசாது இருப்பான்.ஆனாலும் அவனிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அவன் சிரித்தோ முகமலர்ச்சி யடைந்தோ நான் கண்டதில்லை.

எனக்கு இந்த அடிமையிடம் மிகவும் பரிவும் பாசமும் ஏற்பட்டது. கிரேக்கரின் இலக்கியப் பெருமைகளை நன்கு சுவைத்துத் துய்த்த நான், ஒரு கிரேக்கன் இப்படி அடிமையா யிருப்பதை விரும்பவில்லை. அத்துடன் அடிமையாக வாழும் வாழ்வில் கசப்படைந்துதான் இந்தப் பழங்குடி மரபாளன் நகையிழந்து வாடுகிறான் என்று எண்ணினேன்.

ஒருநாள் அவனைக் கூப்பிட்டு, “தம்பி, நீ எவ்வளவோ நல்லவனாக இருக்கிறாய்.என்னிடம் நீ எவ்வளவோ நாணயமாகவும் நடந்திருக்கிறாய். ஆகவே நான், உன் அடிமைத்தனத்தை நீக்கி உன்னை நண்பனாகக் கொண்டு, நல்வாழ்வு வாழும்படி உதவி செய்யப்போகிறேன்,” என்றேன்.

அப்போதாவது அவன் கட்டாயம் முகமலர்ச்சியடைவான் என்று கருதினேன். ஆனால், அவன் முகம் தூக்குத்தண்டனை பெறுபவன் முகம்போலக் கறுத்துத் துயரடைந்தது கண்டு வியப்படைந்தேன்.

66

'ஐயனே! நான் அடிமையாகப் பிறக்கவில்லை. வறுமையும் வாழ்வும் கண்டுவிட்டேன். ஆனால் அடிமையாகத்தான் நான் ருக்கத் தீர்மானித்து விட்டேன் உங்களிடம் அடிமையாகவே வாழ்ந்து இறந்தால் எனக்குப் போதும். அதற்குமேல் எனக்கு ஒன்றும் வேண்டாம். அருள்கூர்ந்து என் அடிமையை