உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

147

செல்வம். இருவர்க்கும் வாழ்வளிக்கத்தான் அந்தச் சனியான தொழிலை விட்டேன்!”

"சரி. எப்படிக் கிடைத்தாலும் சரி இனிப்பு மாம்பழம் எப்படிக் கிடைத்தாலென்ன? தின்னக் கிடைத்தால் போதும்,” என்று அவள் என் கையைக் கிள்ளினாள்.

ஏதோ அதனால் நான் காயமடைந்துவிடுவேனோ என்று. என் 'செல்வம்' லூஸியுடன் வீரமாகப் போராடத் தொடங்கினான்.

என்னைக் காத்த செல்வத்தையும், அந்தச் செல்வந்தந்த செல்வத்தையும் காப்பதில் என் புதிய கடமையைக் கட்டுப் படுத்திக்கொண்டு விட்டேன்.