உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(146)

அருகிலேதான். நான்

அப்பாத்துரையம் - 35

தொடக்கத்திலேயே

பிடியை

விட்டிருந்தாலும் செத்திருக்கமாட்டேன். ஆனால், அச்சம் என்னைக் கோழையாக்கியிருந்தது. அவர்கள் என்னிடம் காட்டிய இரக்கத்திலும் இத்தனை கேலிக்கொடுமை இருந்தது.

நான் சாகாமல் செத்து, பிழைக்காமல் பிழைத்தேன்.

ஆனால், பழைய ஆல்ஃவிரட்ஹார்வி மீண்டும் பிழைக்கவே ல்லை. லூஸியின் சொற்களை மறுத்துக் கடமையைப் பின்பற்றிய ஹார்வி, கள்ளவாணிகக்காரர்மீது போர்தொடுத்துப் புகழ்ஏணியின் உச்சி ஏறத்துடித்த ஹார்வி செத்துவிட்டான்.

புகழுக்கு மாறாக இகழ் பிறர் மதிப்பைப் பெறுவதற்கு மாறாக என் லூஸியின் மதிப்பையும் என் மதிப்பையும் இழந்த நிலை- லூஸிக்குத் தக்க உயர்பதவிக்கு மாறாக, அவள் வாழ்வையே மடத்துணிச்சலுக்கு இரையாக்க இருந்தநிலை, இவை பழைய ஹார்வியைக் கொன்றழித்துப் புதிய ஹார்வியை உண்டு பண்ணின.

நான் என் தீர்வைப் பணியைத் துறந்துவிட்டதாகக் கடிதம் எழுதிய பின்பே லூஸியிடம் சென்றேன்.

அந்த முடிவை லூஸியிடம் தெரிவித்தபின்பே, அவள் கையிலிருந்த குழந்தைக்கு முத்தம் தந்தேன்.

மேற்பணியாளர்கள் வியப்படைந்தனர்; வற்புறுத்தினர்; வருந்தியழைத்தனர். நான் என் உடல்நிலைக்கு அந்தப்பணி ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறி மறுத்து விட்டேன்.

என் முடிவின் காரணத்தை அறியாமலே, என் பழைய பணியை மதித்து எனக்கு வேறு அமைதியான பணியும், சில பரிசுகளும் தரப்பட்டன. அதைக்கூட நான் லூஸியிடம் பெருமை யாகக் காட்டவில்லை.

லூஸி அடிக்கடி கேட்பாள்: "நீங்கள் அடைந்த மாற்றத்தினால் எனக்கு வாழ்வளித்தீர்கள். அமைதி அளித்தீர்கள். ஆனால், அந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது ஒரே நாளில்?”

66

"இதோ அதன் காரணத்தை நீயே கூறிவிட்டாய்! எனக்கு வாழ்வளிப்பவள் நீ. உனக்கு வாழ்வளிப்பவன் இதோ நம்