உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

145

எனக்குத் தெரியும். சாவின் முன்வரும் உணர்விலாத அமைதி என்னை அணைத்ததுபோல இருந்தது.

ஆனால், நான் என்ன காரணத்தாலோ சாகவில்லை. என் உடல்மேல் காற்றுப்படுவது எனக்குத் தெரிந்தது.நான் நீரிலில்லை என்பதை இது காட்டிற்று. நிலம் ஈரமாயிருந்தது. இன்னும் கடலருகிலேயே கிடக்கலாம் என்று கருதினேன். கண்மீது வெயில் எறிப்பதை உணர்ந்தேன். கண்ணைத் திறக்க முயன்றேன். முடியவில்லை. ஆனால், கண்மீது கட்டு இருந்ததாகத் தெரிய வில்லை. கையை அசைத்துப் பார்த்தேன். அசைந்தது. ஆனால் தூக்க முடியவில்லை. கட்டு எதுவும் இல்லை என்று மட்டும் உணர்ந்தேன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், நீடித்துச் சிந்திக்கவும் முடியவில்லை. நான் மீட்டும் உணர்விழந்தேன்:

மீட்டும் சற்று உணர்வு வந்தபோது என் பக்கத்தில் மனிதர் குரல் கேட்டது. ஆனால், அது தொலைவிலிருந்து பேசுவது போலத்தான் இருந்தது. என் வாயில் ஏதோ ஊற்றப்பட்டது. கைகளிலும் உடம்பிலும் ஏதோ சூடு தட்டுப்பட்டது. நான் கண்களைத் திறந்தேன். முதலில் நான் நீலவானைக் கண்டேன். பின்பக்கத்தில் திரும்பியபோது இரண்டு மாமனிதர்கள் என்னருகில் இருப்பது கண்டேன்.

66

இன்னும் சற்று ஓய்வாகப் படுத்துக்கொள்ளுங்கள் அன்பரே! உங்கள் கண் திறந்தது கண்டு மகிழ்ச்சியடைகிறோம். இந்த இடத்துக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள் என்பதுதான் தெரியவில்லை.” என்றார், இருவரில் ஒருவர். நான் சுற்றுமுற்றும் பார்த்தேன்; கடலும் இல்லை, பாறையும் இல்லை; நான் சுண்ணம் வெட்டியெடுக்கும் குழி ஒன்றில்தான் கிடந்தேன்.

"இங்கே எப்படி வந்தாய்? இந்தக் குழிக்குள் எப்படி விழுந்தாய்?” என்று கேட்டார் ஒரு நண்பர்.

அப்போதுதான் இரவு முழுவதும் நான் பட்ட துன்பத்தின் உண்மை வடிவம் எனக்குப் பளீரென்று விளங்கிற்று. என்னைக் கள்ள வாணிபக்காரர் தொங்க விட்டது. கடல்மீதுள்ள பாறையில்லை. அதன் அடிவாரத்திலுள்ள ஒரு சுண்ணக்குழியின்