உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 இனி

அப்பாத்துரையம் - 35

வை எல்லாம் நினைந்து யாது பயன்?' என்று

எண்ணினேன்.

நகரக் கோயிலின் மணி அருகிலிருந்து அடிப்பது போல ‘டாங், டாங்' என்று அடித்தது.நான் அந்த நிலையிலும் மணியை எண்ணினேன். பன்னிரண்டு அடித்திருந்தது. இன்னும் விடிய ஆறு மணி நேரம். ஆள் நடமாடப் பின்னும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். ஏற்கெனவே மெய் முழுதும் உணர்வற்றுக் கை நரம்புகளும் விரல்களும் எரிகின்றன. இனி, நெடுநேரம் இந்த நரக வெப்பைத் தாங்க முடியாது. கைப்பிடியைவிட்டுக் கீழே விழுந்து இறந்தாலும் சாவு மூலம் அதிலிருந்து விடுதலை கிட்டுமே என்று எண்ணினேன்.

உடல் நலிவுற்ற நேரத்திலும், மூளை ஆராய்ச்சியில் இறங்கத் தவறுவதில்லை. இப்போது கடல் வேலி இறக்கமாதலால், கீழே விழுந்தால், பாறையில் விழுந்து உடல் நொறுங்கும். இதில் உடனடிச் சாவு வரா விட்டாலோ இப்போதிருக்கும் வேதனையை

விட நெடுநேரம் மிகுந்த வாதனைப் படவேண்டியிருக்கும். ஆகவே, விழுந்து சாக விரும்பினால்கூட, கடல் வேலி பொங்கும் சமயம் பார்த்து விழுந்தால்தான் நோவற்ற சாவு கிடைக்கும். சாவு கொடியதாயினும், நோவுடன் சாவு அதனினும் கொடிது என்பதை அச்சமயம் நான் நன்றாக உணர்ந்தேன். எப்படியும் கடல் பொங்கிவரும்வரை, அதாவது நாலுமணிவரை பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருப்பது என்று துணிந்தேன்.

கணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஊழியாகச் சென்றது, எனக்கு! இப்படி எத்தனை ஊழிகள் பொறுத்திருந்தேன் என்று தெரியவில்லை. என் உடலின் ஆற்றல் கேடு என் துணிவை வென்றது. இருந்தாலும் சரி, பிழைத்தாலும் சரி. இனி ஒரு கணம்கூட இந்த உயிர் நோவைப் பொறுத்துத் தொங்கமுடியாது என்ற நிலையை எட்டினேன். சாவோ நரக வேதனையோ எதற்கும் துணிந்து ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு கைப்பிடியை விட்டேன்.

நான் வெட்டவெளியில் கீழ்நோக்கி விழுந்தேன்.

விழுந்து நொறுங்கப் போவதாக எண்ணினேன்- விழுந்தேன்- விழுந்துகொண்டிருந்தேன்- அவ்வளவுதான்