உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாட்டுப்புறக் கதைகள்

12. வானுலக யாத்திரை

மதுரையில் இந்திரவிழா 'தாம், தாம்' என்று முழங்கிற்று. வான வில்லின் ஏழு நிறங்களுடனும் கொடிகள் எங்கும் பறந்தன. மன்னர் குடிகள் யாவரும் வேற்றுமை இல்லாமல் உண்டாடி உடுத்து மகிழ்ந்தனர்.

மாடம்பிக்கு அன்று ஒரே எழுச்சி. சொக்கநாதரின் கோயில் மூலையிலுள்ள கடம்பவனத்தைக் காக்கும் பொறுப்பு அவனுடையது. அன்று அதை அணி செய்யும் இனிய கடமை அவனுக்கு ஏற்பட்டது.

கடம்பவனத்தின் எச்சமிச்சமாக அங்கே ஒரு கட்டைதான் இருந்தது. அன்று அவன் ஆர்வக சுரங்களால் கட்டை உயிருள்ள மரமாகத் தளிர்த்தது. கிளைகளில் எதிர்பாராத எதிர்பாராத இடங்களிலெல்லாம் பூக்கள் பூத்துக் குலுங்கின. சிறு கடப்பமரங்கள் சூழ்வர நின்று குலவின.

வனத்திடையே அழகிய மலர்ப்படுக்கைகள், செய் குன்றுகள், பூம்பந்தர்கள், வளைந்து வளைந்து செல்லும் மெல்லடிப் பாதைகள் முதலியவற்றை வனைவதில் அவன் பகலெல்லாம் போக்கினான். அதைச் சுற்றிலும் மதில் போன்ற யிர்தழைவேலியையும் அவன் எழுப்பினான்.

இரவில் அவன் தானே ஓர் ஆர்வவேலையை உண்டு பண்ணிக் கொண்டான். தான் ஆர்வத்துடன் ஒரு நாளில் உருவாக்கிய கடம் பவனத்தை இரவில் எந்த விலங்காவது சென்று அழித்துவிடாமல் அவன் காத்து வந்தான்.