உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

அவன்

உறங்கவில்லை.

(169

கண்ணயர்ந்திருந்தான்;

வானுச்சியில் முழுநிலா நள்ளிரவின் குளிர்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களுக்கு அதிலிருந்து ஓர் அலை பிரிந்து இறங்கியதாகத் தோற்றிற்று. அது தன் கண்ணின் மாறாட்டமாக இருக்க வேண்டுமென்றே அவன் நினைத்தான். ஆனால், அது ஒரு கோபுரத்தின் வழியே இறங்குவது கண்டு அவன் திகைத்தான். எனினும் விரைவில் அவன் இவற்றை மறந்து மீண்டும் முழு நிலாவைப் பார்த்துக் கொண்டு இருந்துவிட்டான்.

திடுமென ஏதோ ஒரு பாரிய உருவம் தன் தழைக்கோட்டை அருகே போவதை அவன் கவனித்தான்.அதை நோக்கி அவன் தன் கையிலிருந்த மலர்ச் செண்டுகளுள் ஒன்றை எறிந்தான். அது சிரித்துக் கொண்டு உள்ளே சென்றதாகத் தோற்றிற்று.

அவனால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. உள்ளே சென்று பார்த்தான். அவன் கண்ட காட்சியை அவனால் நம்ப முடியவில்லை. தான் உண்டு பண்ணிய கடப்பமரத்தடியில் அழகிய நிலவால் செய்த பிழம்புரு ஒன்று நின்றது. அதன்முன் நிலவினாலேயே கடைந்தெடுத்தாற் போன்ற வெள்ளை வெளேரென ஒரு முழுயானை மண்டியிட்டு வணங்கி மலர் சொரிந்தது.

யானை திரும்பும் சமயம் பார்த்து அவன் அதனருகே சென்று நின்றான். 'விலகி வழிவிடு' என்றது யானை

66

"இங்கேவர உனக்கு என்ன உரிமை? இது என்வனம்” என்றான் மாடம்பி.

66

“அது எப்படி?” என்று கேட்டது யானை.

மாடம்பி சற்று விழித்தான். 'நான் இக்கடம்பவனத்தின் காவலாள்” என்றான்.

"அப்படியா? நீ விசித்திரமான காவலாள்தான். இரவில் உனக்க இங்கே என்ன வேலை?” என்றது யானை.

“இந்த வனத்தின் அழகு முழுவதும் பகலில் நான் செய்த கை வேலை. அதை இரவில் யாராவது அழித்துவிடப்படாதே என்று காவலிருக்கிறேன்” என்றான்.

வெள்ளையானையின் நெற்றிப்பட்டம் ஒளி வீசிற்று.