உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

||.

66

அப்பாத்துரையம் - 35

'ஆம். நான் கவனித்தேன். ஆண்டுதோறும் நான் இங்கே வந்து என் ஆண்டவனை வணங்கிப் போகிறேன். ஆனால், இன்று நீ அவனுக்குப் புதுக்கோயில் கட்டியிருக்கிறாய். அடுத்த ஆண்டும் இப்படி கட்டு. உனக்கு நான் வேண்டிய வரம் தருகிறேன்” என்று கூறி ஆனைபுறப்பட இருந்தது.

மாடம்பி அதன் கால்களைக் கட்டிக் கொண்டு,"ஒரே ஒரு சொல் சொல்லிவிட்டுப் போ, என் உயிரினும் அரிய ஆனையே! நீ யார்? எப்படி நீ எனக்கு வரந்தர முடியும்?” என்று அவன் கேட்டான்.

புன்னைக்காய் அளவாயிருந்த யானையின் மாநிறக் கண்கள் பொன்நிற மாங்காயளவாய் விரிந்தன. “நான் இந்திரன் யானை. வானுலகத் திலிருந்து வருகிறேன். முன் நான் மண்ணுலக யானையாக இருந்தபோது, இந்தக் கடம்பவனப் பெருமானை வணங்கியே வானுலகம் சென்றேன். ஆகவே ஆண்டுதோறும் வருவேன். மேலும, உன் கை வேலையைப் பார்க்க, அடுத்த ஆண்டு கட்டாயமாக, சற்று முன்கூட்டியேகூட வருவேன்,” என்றது.

யானை புறப்பட்டது.

ஆனால், மாடம்பி இப்பொழுதும் அதை விடவில்லை. வாலைப் பிடித்துக் கொண்டு "ஆனை அண்ணா, ஆனை அண்ணா! இன்னும் ஒரே ஒரு செய்தி” என்றான்.

66

யானையின் காதுகளிலிருந்து மின்னொளிகள் வீசின. என்ன? விரைவில் கூறு. நான் போக வேண்டும்" என்றது அது.

“வானுலகம் எப்படி இருக்கும்? அது மதுரையவ்வளவு பெரிதாக இருக்குமா? அதைவிடப் பெரிதா?” என்று அவன்

கேட்டான்.

யானையின் சிரிப்பு தொலைவிலுள்ள ஓர் அருவியின் சலசலப்புப் போலிருந்தது.

66

“அங்கே எல்லா அழகும் இருக்கும். ஆனால் அந்த அழகு அவரவர் விருப்பப்படி காட்சியளிக்கும்” என்றது.

66

‘உணவுக்கும் நீருக்கும் அங்கே என்ன செய்வீர்கள்?' என்றான் அவன்.