உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

171

"அங்கே பசியும் வேட்கையும் இரா. ஆனால், பிள்ளைகள் தின்பண்டம் தின்பதுபோல, நாங்கள் நிலவொளியையும், மின்னலையும், வானவில்லையும் உண்போம்” என்றது.

"அப்படியா?" என்று மாடம்பி வாயைப் பிளந்தான்.

தான் தூங்கிக் கொண்டு கொட்டாவி விடுவதாக அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. யானையை எங்கும் காணவில்லை.

மாடம்பியின் வாழ்க்கையில் அன்று முதல் ஒரு மாறுதல்

ஏற்பட்டது.

மதிச்சியத்தில் அவனுடன் கேலிப் பேச்சுப் பேசாதவர்கள் கிடையாது. அவனும் கேலிக்கு எதிர் கேலி சொல்லாத நாள் கிடையாது. ஆனால், இப்போதோ அவன் எல்லோருடனும் நேசமாக மட்டுமே இருந்தான்; பேசுவது கிடையாது. அவன் எப்போதும் தன் குரங்கு 'வாலி'யிடம் குறும்பு பண்ணுவான். தன் மனைவி மங்கையிடம் அதைத் தூதனுப்புவான். இப்போதோ வாலி குறும்பு பண்ணும், அல்லது தூது கொண்டு வரும்; அவன் அவற்றை வாங்கிக் கொள்வதில்லை. தூதனுப்புவதுமில்லை.

அவன் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் ஒரு புத்தார்வம் எழுந்தது. 'இந்த மதிச்சியத்தில்-ஏன், இந்த மதுரையில்தான்- என்ன இருக்கிறது? நாம் எப்படியாவது வானுலகத்துக்குப் போய்விட வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உண்மையான இன்பம் ஏற்படும்' என்று அவன் நினைத்தான்.

வானுலகத்துக்கு அவன் தன் உடலை விட்டுவிட்டுப்போக எண்ண வில்லை. 'உடலில்லாமல் எப்படி வாழ முடியும்? ஆனால், உடல் மட்டும் இருந்து என்ன பயன்? 'பேசுவதற்கு மங்கையும், குறும்பு செய்வதற்கு வாலியும் இல்லாத வானுலகம் ஓர் உலகமா"..இவ்வாறு அவன் சிந்தனை செய்தான்.

உள்ளத்தில் செய்த முடிவை அவன் வேறு யாரிடமும் சொல்லவில்லை. ஆனால், உள்ளத்தின் ஒரு மூலையில் அம்முடிவை அவன் பதிவு செய்துவிட்டான்.