உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(172)

அப்பாத்துரையம் - 35

அடுத்த ஆண்டு கடம்பவனம் இன்னும் புத்தம் புதிய அழகொப்பனைகளுடன் எல்லார் கண்களையும் கவர்ந்தது. காவலாளுக்கு இவ்வளவு கரிசனை எப்படி வந்தது. கலைத் திறந்தான் ஏது?” என்று எல்லாரும் வியப்படைந்தனர்.

அது வேறு யார் கண்களுக்காகவும் ஒப்பனை

செய்யப்படவில்லை. வெள்ளை யானையின் கண்களுக்குத்தான் விருந்தாகச் செய்யப்பட்டது' என்பதை யார் அறிவார்கள்!

அவ்வாண்டு வெள்ளை யானையின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. “மனித உலகில் உன்னைப்போல் நல்லவன் இருப்பான் என்று நான் கனவிலும் கருதியதில்லை. உனக்கு என்னவரம் வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றது.

"நான் வானுலகம் வரவேண்டும்" என்றான் மாடம்பி.

“நீ எப்படி வர முடியும்?" என்று யானை கேட்டது.

66

“ஆனை அண்ணா. நீங்கள் நினைத்தால் முடியாதா?" என்றான் மாடம்பி. "போகுமுன் உங்கள் வாலை நான் பிடிக்குமட்டும் எனக்கு உத்தரவு தாருங்கள். உங்களுடன் நான் வானுலகம் வந்துவிடுகிறேன்" என்றான்.

யானை சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்துப் பின்,“சரி, உன்னிடம் எனக்கு மிகவும் பாசம் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, உன்னைக் கொண்டு போகத் தடையில்லை. புறப்படு விரைவில்." என்றது.

66

"அண்ணா, நான் இந்த ஆண்டு வர முடியாது. அடுத்த ஆண்டுதான் வர முடியும்?”

“ஏன்?”

“வானுலகத்துக்கு நான் தனியாக எப்படி வர முடியும்?”

“பின்!”

“என் மனைவி மங்கை பெருத்த வாயாடிதான். ஆனால், அவளில்லாமல்."

“சரி. சரி. அடுத்த ஆண்டு இன்னும் மிக அழகாக ஒப்பனை செய்து வை. நீ விரும்பியபடியே உன்னையும் உன் மனைவியையும் இட்டுச் செல்கிறேன்" என்றது யானை.