உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் – 4

173

மாடம்பியின் பண்பில் மீண்டும் ஒருமுறை மாறுதல் ஏற்பட்டது. எவரிடமும் பேசாதிருந்த அவன் அடிக்கடி மனைவியிடம் ஏதோ பேச விரும்புபவன்போல வாய் திறப்பான். குரங்கு அச்சமயம் அவன் ஏதோ பேச வருகிறான் என்று பல்லை நெறுநெறெனக் கடித்து எச்சரிக்கும். அவன் பேச வந்ததை அடக்கிவிடுவான். வாயாடியான அவன் மனைவி இதைப் பார்த்தபின். அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். மாடம்பி முதலில் தயங்கித் தயங்கியும், பின் ஆர்வத்துடனும் வெள்ளை யானையைப் பற்றியும், வானுலக யாத்திரையைப் பற்றியும் பேச்சுக் கொடுத்தான். அதே சமயம் இது வெளியில் எவருக்கும் தெரியாமல் அடக்கமாயிருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கை செய்தான்.

வானுலகம், வெள்ளையானை ஆகியவற்றை இந்தக் காலத்தில் யார் நம்புவார்கள்! அதிலும் இவ்வுலக ஆசைகளை யெல்லாம் ஒன்றுவிடாது பிடித்து அணைக்க விரும்பும் மங்கை, அதை எவ்வாறு நம்ப முடியும். அவள் முதலில் தன் கணவன் தன்னை முட்டாளென்று கருதி வம்பளப்பதாக எண்ணினாள். "கொண்ட மனைவியிடத்தில் இப்படிக் கேலியும் பொய்யும் அளக்கலாமா?” என்று சீறினாள். “கனவு கண்டாயோ!" என்று ஏளனஞ் செய்தாள். ஆனால், மாடம்பியின் நம்பிக்கையை எதுவும் எள்ளளவும் அசைக்கவில்லை.

மனைவிக்கு வரவரத் தன்னையறியாமல் நம்பிக்கை வந்தது. ஆனால், கணவனுடன் தான் மட்டும் தனியாகப் போக அவள் விரும்ப வில்லை. கணவனுக்குத் தான் துணையாயிருப்பதுபோல தனக்கு வாலி துணையாயிருக்க வேண்டுமென்று அவள் வாதாடினாள். மாடம்பிக்கும், வாலியில்லாமல் மங்கை யுடனிருந்து பொழுது யோக்குவது கடினமாகவே தோன்றிற்று. எனவே, இறுதியில் அவன் வாலியையும் தன் யாத்திரையில் சேர்த்துக் கொள்ள இணங்கினான்.

யாத்திரை தொடங்க இன்னும் பன்னிரண்டு மாதங்கள் இருந்தன. அதுவரை இந்த அரும்பெருஞ் செய்தியை ஒன்றிரண்டு பேரிடமாவது சொல்லாமலிருக்க மங்கையால் முடியவில்லை. முதலில் அவள் நாக்குப் படபடத்தது. பின் உள்ளம் படபடத்தது. இறுதியில் நாக்கும் உள்ளமும் உடலும் படபடத்தன. அவள் ஒரு