உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(174) ||

||–

அப்பாத்துரையம் - 35

நாள் இச்செய்தியைத் தன் உயிருக்குயிரான சித்தியிடம் கூறி வைத்தாள். வேறு யாரிடமும் கூறப்படாதென்ற எச்சரிக்கை யுடன் தான் கூறினாள்!

மங்கையின் சித்தி வண்டார்குழலிக்கு இரண்டே இரண்டு பொருள்களில்தான் ஆசை. ஒன்று மீனாட்சியம்மன் திருமுன்காட்சி. அடுத்தது அவள் பிள்ளை அய்யாவு.

அவள் மீனாட்சியம்மனுக்குத் தன் நன்றி தெரிவித்தாள். வீட்டுக்கு வந்து அய்யாவைக் கட்டியணைத்துக் கொண்டு அவன் காதோடு காதாக, தன் ஆவலையும் அது கிட்டத்தட்ட நிறைவேற இருப்பதையும் கூறினாள். அது நிறைவேறாதற்கிருந்த ஒரே குறையையும் அவள் தெரிவித்தாள்.

"நீ இல்லாமல் வானுலகத்தில்கூட நான் எப்படி அமைதியாயிருப்பேன்? நான் மங்கை இடுப்பைக் கட்டிக் கொண்டு வானில் ஓடும்போது, நீயும் என் இடுப்பைக் கட்டிக் கொண்டு என்னுடன் வந்துவிடுகிறயா?" என்றாள்.

"மதுரையில் பிழைப்புக்கு வழியில்லை. வானுலகில் எப்படியாவது வழி கிடைக்கலாம். வேலையில்லாமலேகூட அங்கே சாப்பிடலாம் என்று கூறுகிறார்களே! ஆகையால் மறுசொல் சொல்லாமல் அம்மாவுடன் போய்விடுவோம்" என்று நினைத்தான் அய்யாவு. ஆகவே, அவன் தாயுடன் வருவதாக உறுதி கூறினான்.

அய்யாவுக்கு வேலை வெட்டி இல்லாவிட்டாலும் அம்மா சோறு போட்டு வந்தாள். ஆனால், அத்துடன் அவன் வாழ்வு நிறைவடையவில்லை. ஓய்வு நேரங்களிலெல்லாம் அவ்வாழ்வில் நிறைவு உண்டு பண்ணியவள் ஆவுடை.

அவள் மாடம்பி வீட்டில் மங்கைக்கு உதவியாக வேலை செய்தவள். அவள் சுறுசுறுப்பாக வேலை செய்வாள். ஆனால், ஆள் காணாத நேரத்தில் அவள் சுடச்சுட அப்பத் துண்டுகளையும், புத்தம்புதிய மலர்ச்செண்டுகளையும் இடுப்பில் செருகிவைத்துக் கொள்வாள். இவற்றை அவள் அய்யாவுக்குக் கொடுத்து அவனுக்கு மகிழ்ச்சி யூட்டித்தானும் அவன் பசப்புரையில் ஆழ்ந்து மகிழ்ந்திருப்பாள்.