உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 4

177

நிலவொளிபட்டொளிக்கும் வெள்ளைனையே என்பதை அவர்கள் கனவில்கூடக் கருதவில்லை.

ஆண்டுதோறும்

கடம்பவனத்தில் பூசை

செய்து

விட்டுவரும் வெள் ளானை இவ்வாண்டு ஒரு கடம்பவனத்தையே இழுத்துக்கொண்டு வருகிறதோ என்று நினைத்து முழுநிலாச் செல்வன் சிரித்தான். அந்த இரகசியம் எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும் என்று ஒன்றை ஒன்று பார்த்துக் கண்சிமிட்டுவதுபோல விண்மீன்கள் விட்டுவிட்டு மின்னின.

இந்த உயிருள்ள சங்கிலி கடைசிவரை அறுந்து விடாமல் வந்து சேருமா என்று கவலையுடன் விழித்து நோக்கிக் கொண்டிருந்த வானம், என்னவோ நினைத்து, இரண்டொரு பனித்துளிகளைத் தன் கண் களிலிருந்து சிதறிற்று.

யானைகளிடையே தன் வெண்ணிறத்தால் சிறப்புப் பெற்ற இந்திரன் யானை இப்போது தன் வால்நீளத்தாலும் தனிச்சிறப்புப் பெற்று வானில் மிதந்து சென்றது.

வாயாடி மங்கைக்கு வானுலகம் போய்ச்சேரும்வரை வாயாடாமல் இருக்க முடியவில்லை.

‘அத்தான், அத்தான்! வானுலகத்தில் போனால் அங்குள்ள பெண்களிடம் நான் எந்த மொழியில் பேசுவது? அவர்களுக்குத் தமிழ் தெரியுமல்லவா?” என்று அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

"ஆம், தமிழ்தெரியாத வானகத்தில் நமக்கென்ன வேலை?” என்றான் மாடம்பி, தாய்மொழிப் பற்றுடன்.

மக்கள்

"அதிருக்கட்டும் அத்தான்; வானுலக நம்மைப்போல வேட்டிசேலை கட்டிக் கொண்டிருப்பார்களா? அல்லது பூசாரிகளையும் அவர்கள் வீட்டுக்காரிகளையும் போல மூலக்கச்சம் போட்டிருப்பார்களா?” என்றாள்.

66

அதெல்லாம் போய்ப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரைப் பொறுமை யாயிரேன்” என்று அவன் கடிந்தான்.

அவள் சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். பின் “இந்த ஒரு கேள்விக்கு மட்டும் மறுமொழி கூறுங்கள், அத்தான்; அப்புறம் பேசாமலிருக் கிறேன்” என்றாள்.