உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 35.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176)

II.

மாடம்பி விரைந்து அதன் வாலை

முறுகப் பற்றினான்.

அப்பாத்துரையம் - 35

ருகைகளாலும்

முறுகப் பற்றியது நன்றாயிற்று. ஏனென்றால், ஒரு பெண்ணையும் ஒரு குரங்கையுமே தாங்க அவன் எண்ணியிருந் தான். பல ஆண் பெண்களடங்கிய அணி வரிசையைச் சுமக்க வேண்டி வருமென்பது அவனுக்குத் தெரியாது.

தோளிலேறிற்று.

யானை மேலெழுந்தது, அவன் வாலில் தொங்கினான். அவன் எதிர்பார்த்தபடி மங்கை அவன் இடுப்பைப்பற்றித் தொங்கலானாள். இருவரும் எதிர் பார்ப்பதற்குமுன்பே, வாலி மங்கையின் முதுகு கடந்து அவன் குரங்குகளுக்கிருக்கும் கூரறிவைக் காட்டியவாறு, அது அவன் கழுத்தைத் தன் வாலால் சுற்றிக்கொண்டு தலைகீழாய்த் தொங்கி, மங்கை கழுத்தைக் கைகளால் பிடித்துக் கொண்டது. கணவன் இடுப்பில் தன்பிடிவிட்டாலும் குரங்கின்பிடி தன் கணவனுடன் தன்னை இணைக்கும் என்று கண்ட மங்கை. அந்நிலையிலும் குரங்குக்குத் தன் நன்றியறிவிப்பை ஒரு முத்தத்தால் தெரிவித்தாள்.

மங்கை மனம் முழுவதும் கணவனிடமும் குரங்கினிடமும் இல்லை. தன் இடுப்பில் இருகைகள் வளைந்து பற்றுவதை அவள் ஆவலுடன் எதிர்பார்த்தாள். எதிர்பார்த்தது பொய்க்கவில்லை. ஆருயிர்ச் சித்தி வண்டார் குழலியின் கைகள் அவள் வானிலெழுமுன் அவள் இடுப்பைப் பற்றின.

வண்டார்குழலியைப் பற்றி அவள் ஆசைமகன் அய்யாவு, அய்யாவைப் பற்றி அவன் நேசமிக்க தோழி ஆவுடை, அவள்பின் சாத்தி, எயினி, சாத்தன் என வானுலகம் செல்லும் உயிருள்ள தொடர் வண்டி அழகியதொரு சங்கிலியாக நீண்டது.

மதுரையின் தலைக்கோபுரம் தாண்டி யானை வானகந் தாவி உயர்ந்தது. ஆனால், அதன் வாலுடன் வாலாகத் தோன்றிய நிழற் சங்கிலித் தொடர் பின்னும் நிலத்தை விட்டு முற்றிலும் அகலவில்லை. அது அவ்வளவு நீளமாக இருந்தது.

மதுரை மக்களில் தற்செயலாக மாடியில் படுத்திருந்த சிலர் கண்விழித்தபோது ஒரு பொன்மேகத்திலிருந்து மெல்லிய சங்கிலி தாங்குவதைக் கண்டனர். அது மனிதச் சங்கிலி என்பது அவர்களுக்குத் தெரியாது. அதை ஒரு கனவுக்காட்டி என்று அவர்கள் கருதினர். ஆனால், அந்தப் பொன்மேகம் உண்மையில்